Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 06

 இன்று "அவருடைய" சத்தம்


மே 6


🔸️ நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்ட ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும்! 🔸️


ஆவியில் நிறைந்த ஊழியம், தேவன் தங்களை அழைத்த "குறிப்பிட்ட" ஊழியத்தை 

நிறைவேற்றி முடிப்பதாகவே இருக்கும்! பவுல் கூறும்போது, "நான் ஊழியக்காரனானேன்!" என்றும் "நான் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன்" (கொலோசெயர் 1:23,25; 1தீமோத்தேயு 2:7) என்றும் கூறினார். பார்த்தீர்களா, இந்த பவுல் ஆணி கடாவிய தன் இரட்சகரின் கரத்தினால் நியமனம் செய்யப்பட்டாரே அல்லாமல், எந்த மனுஷனாலும் அவர் நியமனம் செய்யப்படவில்லை! ஓர் அப்போஸ்தலனாயிருக்கும்பொருட்டு, தேவன்தான் அவரை அழைத்திருந்தார்!! இந்த அழைப்போ தனக்கு 'தரப்பட்டது' என கொலோசெயர் 1:25-ல் கூறினார். அதாவது, தேவன் அவருக்குத் தந்த வரமே அல்லாமல், தானாகவே முயன்று சாதித்து சுதந்தரித்துக் கொண்ட ஒன்று அல்ல என்பதையே தெளிவுபடுத்தினார்! மேலும் இந்த வசனத்தில் "தான் பிறருக்கு ஊழியம் செய்திடும் பொருட்டே" இந்த அழைப்பை பெற்றதாகவும் கூறினார். 


நம் யாவருக்குமே ஒரு விஷேச அழைப்பை தேவன் வைத்திருக்கிறார். ஆகவே, தேவன் நம்மை அழைக்காத ஒன்றிற்கு நம்மை அவர் மாற்றும்படி ஜெபிப்பது வீணான செயலேயாகும். ஏனெனில், அவனவனுக்குரிய வரத்தை பரிசுத்த ஆவியானவரே தீர்மானிக்கிறார்!!


ஓர் அப்போஸ்தலனாய் இருப்பதற்கு பவுல் அழைக்கப்பட்டார்! ஆனால் எல்லோருக்கும் இந்த அழைப்பு இல்லை!! ஆகவே, நாம் தேவனுடைய முகத்தைத்தேடி கேட்க வேண்டியதெல்லாம், "நாம் செய்திடும்படி தேவன் அழைத்த அழைப்பை நிறைவேற்றுவதற்குரிய வல்லமையே" ஆகும்! பவுல் அர்க்கிப்புக்கு புத்தி சொல்லுகையில், "நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாக!" (கொலோசெயர் 4:17) என்றே புத்தி சொன்னார். 


தேவன் ஒருபோதும், வட்டமான துவாரங்களில் சதுரமான மர உருளைகளை வைப்பவர் அல்ல! ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட ஒரு ஸ்தலத்தில் தன் சபைக்குரிய தேவை இன்னதென்பதை தேவன் அறிந்திருக்கிறார். அதன்படியே நம் ஒவ்வொருவரையும் அவர் ஆயத்தம் செய்கிறார். நமக்கென அவர் தெரிந்து கொண்ட ஊழியமானது, நாம் செய்திட விரும்பும் ஊழியத்தைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானதாய் இருக்கக்கூடும்! ஆகிலும், நாமோ அவரது அழைப்பிற்கு அடங்கிய வர்களாய் இருந்தால், அந்த அழைப்பை நிறைவேற்றிட நம்மை அவர் நேர்த்தியாய் ஆயத்தம் செய்து விடுவார்!!


ஜெபம்:

அன்புள்ள தகப்பனே! நீர் எங்களுக்குத் தந்த ஊழியத்தை தீர்க்கமாய் உணர்ந்திட உதவி செய்தருளும்! அந்த ஊழியத்தை எங்கள் ஜீவ காலத்தில் நிறைவேற்றி முடித்திட கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments