இன்று "அவருடைய" சத்தம்
மே 5
🔸️ "உத்தம அடிமையாய்" இருப்பதே தேவனுக்கு உகந்த ஜீவியம்! 🔸️
ஓர் அடிமை தான் நினைத்ததையெல்லாம் செய்யும்படி அங்கும் இங்கும் போய் விடமாட்டான்! அதற்குப் பதிலாக, தங்கள் எஜமானிடம் வந்து "எஜமானே, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்?" என்றே கேட்டு நிற்பான். எஜமான் சொன்னதை 'அப்படியே' செய்துவிடுவான்!!
"ஒரு உக்கிராணக்காரனுடைய மிக முக்கியமான காரியம் யாதெனில், அவன் எஜமான் சொல்வது எதுவோ அதை மாத்திரமே செய்வான்!" (1 கொரி. 4:2 - Living Bible) என்றே வேதம் கூறுகிறது.
எவ்விதமான மனிதனை தேவன் தனக்கென தேடுகிறார் என்பதையும் ஓரு பக்தன் கீழ்கண்டவாறு நேர்த்தியாகக் கூறியுள்ளார்:
"எனக்கு காத்திருந்து விழித்திருப்பவனையே தேடுகிறேன்;
என் கை அசைவின் அழைப்பைக் கண்டவன் என் கண் இமை அசைவைக் காண்பவன்!
நான் தந்த வேலையை நான் விரும்பியபடி செய்பவன்!
நான் தராத வேலையை ஒருபோதும் செய்யாதவன்! இத்தகைய தாசனை நான் கண்டுபிடித்தால்
என் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்காதோ!
அவ்விதமே, தன் எஜமானின் மனதைக் கற்றறிந்து
அவர் சித்தம் அனைத்தும் செய்திட
இப்பாரினில் மனிதர் யாருண்டு?"
ஒரு சமயம் ஆண்டவர் "ஒரு மனுஷனைத் தேடினேன்" எனக் கூறினார். ஆனால், "ஒருவரையும் காணேன்" என்றே அந்த வசனம் சோகமாய் முடிந்தது! (எசேக்கியேல் 22:30). ஆம், இன்றும் தேவன் இந்த "அன்பின் - அடிமைகளையே" தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் மிகச் சொற்பமானவர்களேயே அவரால் காண முடிகிறது!!
ஜெபம்:
பரம தந்தையே! எங்கள் விருப்பத்தின்படி செய்திடும் கிரியை அல்லது ஊழியம் அல்ல! நீர் பணித்திடும் கட்டளையை நிறைவேற்றும் அடிமைகளாயிருக்க கிருபை தாரும்!" கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments