இன்று "அவருடைய" சத்தம்
மே 8
🔸️ பரலோக இராஜ்ஜியத்தை சுதந்தரிக்கும் வழி அறிய வேண்டும்! 🔸️
"ஆவியில் ஏழ்மையாய் இருத்தல்" (மத்தேயு 5:3) என்பதற்கு உண்மையான அர்த்தம் யாது? என ஜனங்கள் அறியாத பட்சத்தில் அவர்கள் பரலோகராஜ்யத்தில் ஒருக்காலும் பிரவேசித்திடவே முடியாது. இன்று எண்ணற்ற விசுவாசிகள் பல வருடங்களாகியும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்காமல் இருப்பதற்கு இதுவே பிரதான காரணமாகும்.
ஆவியில் ஏழ்மை என்றால் அதற்கு உண்மையான அர்த்தம் என்ன? இந்த பேருண்மையை நன்றாய் விளங்கிக்கொள்ள, இவ்வுலகத்தில் ஒருவன் பொருளாதாரத்தில் ஏழையாய் இருக்கும் உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு ஏழையான பிச்சைக்காரன் தன் அடிப்படைத் தேவைக்குரிய வீடோ, வேலையோ, உணவுப்பொருட்களோ ஆகிய எதுவுமே இல்லாதவனாய் இருக்கிறான். அவன் வீடு வீடாய் சென்று தன் பாத்திரத்தில் தனக்குரிய உணவை வாங்குகிறான். அன்று அவைகளை சாப்பிட்டு முடிந்ததும், அவனுடைய பாத்திரம் காலியாகிவிடுகிறது! எனவே மறுநாள் காலையிலும் வழக்கம்போல பிச்சை கேட்க செல்கிறான். இதுவே அவனுடைய தினசரி வாழ்க்கை கோலமாய் இருக்கிறது! பொருளாதாரத்தில் ஏழையாய் இருப்பதின் உண்மையான பொருள் இதுவே ஆகும்.
இப்போது மேற்கண்ட உதாரணத்தை ஆவிக்குரிய ஏழ்மைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். ஆம், ஆவியில் எளிமையாக இருப்பதென்பது, நம்முடைய ஆவிக்குரிய தேவையை அந்த பிச்சைக்காரனைப்போல நாள்தோறும் உணர்வதே ஆகும். அவனைப் போலவே ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய ஜீவியம் செய்ய பெலனற்றவர்களாய் . . . . அவருக்கென ஊழியம் செய்வதற்குத் திராணியற்றவர்களாய், மிகுந்த தேவையோடு தேவனிடம் செல்கிறோம். இவ்வித ஆவிக்குரிய ஏழ்மையானது, சுய-திருப்தி (Self-sufficient), சுய-நம்பிக்கை (Self-confident), என்பவற்றிற்கு முற்றிலும் எதிரிடையான ஜீவியமேயாகும்.
இயேசுவுக்கு முன்பு ஆதாமைத் தலைமையாகக் கொண்ட ஒரு பழைய வழியையே மக்கள் அறிந்திருந்தார்கள். இந்த ஆதாமின் தலைமையில் சுய-திருப்தியும், சுய-நம்பிக்கையும் பெரும் மதிப்புடையதாகும்! ஆனால், பரலோகராஜ்யத்தின் தகுதியோ, தேவை நிறைந்த தரித்திரனாகவும், சுயபெலன் குன்றியவனாகவும் தேவனுக்கு முன்பாய் அங்கலாய்த்து வந்து நிற்கிறான். ஆ, இவனையே "பரலோகராஜ்யம் அத்தனையும் சுதந்தரிக்க தகுதியானவன்" என சத்தியவேதம் முத்திரை பதிக்கிறது! ஆவிக்குரிய தன் இயலாமையை உணர்ந்த இவனே பரலோகராஜ்ய மாளிகைக்குரிய சாவியைப் பெற்றுவிடுகிறான்!
ஜெபம்:
அன்பின் தந்தையே! எங்கள் ஆவிக்குரிய ஜீவியமும், ஊழியமும் "சுய-பெலன்" அற்ற ஏழ்மையின் மூலமாகவே செழித்திட முடியும் என உணர்ந்தோம்! இவ்வழி சென்று உம் இராஜ்ஜியம் சுதந்தரிக்க அருள் செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https:// is t.me/hisvoicetoday



0 Comments