உண்மையான அன்பு
1. உன்னை சோதிக்கும்.
2. உன்னை சிட்சிக்கும்.
3. உன்னை பாதிக்கும்.
4. உனக்கு போதிக்கும்.
5. உன்னை கண்டிக்கும்.
6. உன்னை தண்டிக்கும்.
7. உனக்காக சகிக்கும்.
8. உனக்காக பேசிடும்.
9. உனக்கு கொடுக்கும்.
10. உன்னோடு சந்தோஷிக்கும்.
1. உன்னை சோதிக்கும்.
அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்,தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.
மாற்கு 1:13
2. உன்னை சிட்சிக்கும்.
தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச்சிட்சிக்கிறார்.
நீதிமொழிகள் 3:12
3. உன்னை பாதிக்கும்.
ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால்; அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு என்றார். அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால்தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுரண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்;.
யோபு 2:3-8
4. உனக்கு போதிக்கும்.
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
சங்கீதம் 25:12
5. உன்னை கண்டிக்கும்.
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
வெளிப்படுத்தின விசேஷம் 3:19
6. உன்னை தண்டிக்கும்.
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
எபிரேயர் 12:6
7. உனக்காக சகிக்கும்.
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12
8. உனக்காக பேசிடும்.
அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக. நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன். பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
ஆதியாகமம் 18:32
9. உனக்கு கொடுக்கும்.
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
ரோமர் 8:32
10. உன்னோடு சந்தோஷிக்கும்.
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
யோவான் 15:11
0 Comments