Keith Miller, in 'A Second Touch' says,
"I have found that becoming a deeply committed Christian does not keep one from being fully aware of beauty in the opposite sex. And I do not think this recognition is in any sense sin or is an indication that one needs a spiritual check-up. In fact, if you do not recognize physical beauty in the opposite sex, and if you are my age, you may need a physical check-up. And I am very serious. 'Recognition', in my opinion, is never sin. As a matter of fact, recognition of specific possibility for sinning is a prerequisite for the development of Christian character. For instance, a blind man would not be considered honest for not stealing gold on a table before him - only a man who saw the gold, and recognized fully his drive for it, but chose not to steal it.... It is what one does with that which is recognized, that causes the problems."
Brother. Zac Poonen
From:-
"Sex, Love & Marriage" (Chapter: Unclean Thoughts)
https://www.cfcindia.com/books/sex-love-marriage#Dynamite---Handle-With-Care
கெய்த் மில்லர் என்ற பரிசுத்தவான் 'மறுமுறை தொடுதல்' என்ற புத்தகத்தில் கீழ்காணும் விதமாய் கூறியிருக்கின்றார்:
"முழு அர்ப்பணமுள்ள கிறிஸ்துவனாய் மாறியவன், எதிர்பாலரின் வசீகரத்தை அறிந்து கொள்ள முடியாதபடி, அதற்கு தூர விலகி நிற்பான் என கருதிவிடக்கூடாது. எதிர்பாலரின் வசீகரத்தை அறிந்து கொள்ளும் உணர்வு பாவமல்ல! அவ்வித உணர்வு உங்களுக்கு இல்லையென்றால், உங்களுக்கு ஆவிக்குரிய தற்பரிசோதனை வேண்டுமென்று நான் கூற மாட்டேன். ஆனால் எதிர்பாலரின் வசீகர ரூபத்தை நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவர்களாய் இருந்தால், உங்களுக்கு 'சரிர, வைத்திய சோதனை' வேண்டுமென்றே கூறுவேன். இதை உங்கள் மீது கொண்ட கரிசனை மிகுந்த அக்கறையோடுதான் கூறுகிறேன்! ஆகவே 'வசீகரத்தை உணர்வது' பாவமல்ல! இன்னமும் வலியுறுத்திக் கூறவேண்டுமென்றால் 'பாவம் செய்யத் தூண்டப்படுதலின் உணர்வு' நம் கிறிஸ்தவ குணாதிசயத்தில் வளர்ச்சியடைவதற்கு மிக அவசியமானது என்றே கூறுவேன். உதாரணமாய் ஒரு குருடன் தனக்கு முன் உள்ள மேஜையில் இருக்கும் தங்கத்தை திருடவில்லை என்பதற்காக, அவனை நேர்மையாளன் எனக் கூறிட இயலாது. ஆனால் அந்த தங்கத்தைக் கண்ட ஒரு மனிதன், அதை எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தால் உந்தப்பட்டு 'திருடக் கூடாது' என்ற பண்பை தெரிந்து கொள்வதில்தான் ஆவிக்குரிய தன்மை வளர்ச்சியடைகிறது. ஆனால் தங்கத்தையோ வசீகரத்தையோ கண்ட ஒருவன், தன் உணர்வை தவறான செயலுக்கு பயன்படுத்துவதுதான் குற்றமுள்ளதாய் இருக்கிறது" எனக் கூறினார்.
- சகோதரர் சகரியா பூணன் (பாலிய ஈர்ப்பும் திருமணமும்! என்ற புத்தகத்திலிருந்து).
0 Comments