இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 9
🔸️ கிறிஸ்துவின் சரீரத்தில் பொறாமை இருப்பதில்லை! 🔸️
ஆதி மனுஷன் ஏதேன் தோட்டத்திலிருந்து தள்ளப்பட்டபின்பு, மனுஷனின் "முதல் பாவமாக" கூறப்பட்ட பாவம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அந்த முதல் பாவம் "பொறாமை" என்பதை உங்கள் மனதில் எப்போதும் பதித்து வையுங்கள்! இந்த "காயீனுடைய பாவத்தை" அப்போஸ்தலனாகிய யோவான், தன் காலத்தில் இருந்த சபைகளின் சகோதர சகோதரிகளுக்கு எச்சரித்து நிருபம் எழுதியது எத்தனை முக்கியத்துவம் கொண்டதாய் இருக்கிறது!! யூதாவும் தன் நிருபத்தில், இதை "காயீனுடைய வழி" என்ற அடைமொழியோடு கூறி எச்சரிக்கை விடுத்தாரே!!
"காயீனுடைய வழி" என்றால் என்ன? ஆம், அவனுடைய வழி "பொறாமையின் வழியே" ஆகும். இந்த வழி தனிமை... நிம்மதியற்று அலைதல்.... ஆகிய பாதைக்குள் நம்மை நடத்தி, முடிவில்.... "ஐக்கியத்தை" நாசம் செய்யும் கொடிய 'விளைவை' நமக்குள் ஏற்படுத்திவிடும்! இந்த காயீனுடைய வழியில் நாம் சென்றுவிட்டால், "யாரோ சிலரை...." தேவன் ஆசீர்வதிப்பதைக் காண நம்மால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! அதிலும் குறிப்பாக, 'அந்த சிலர்' நமக்கு சமமானவர்களாகவோ அல்லது நம்மைவிட இளையவர்களாகவோ இருந்து விட்டால், இந்தப் பொறாமையின் நர்த்தனத்திற்கு ஒரு அளவே இருக்காது!
ஒருவரின் இருதயத்தில் பொறாமை தங்கிவிட்டால், "அந்த சகோதரன், இன்னமும் கிறிஸ்துவின் சரீரத்தைக் குறித்த வெளிச்சத்தைப்" பெறவில்லை என்பதையே அதன் மூலமாய் நிரூபணம் செய்கிறார்.
நம்முடைய சொந்த சரீரத்தையே சற்று நோக்குங்கள். நம் அவயவங்களுக்குள் எந்தப் பொறாமையும் இல்லையே!! எல்லா முக்கியமான அலுவல்களையும் செய்திடும் வலது கையைப் பார்த்து இடதுகை பொறாமைப்படுவதே இல்லை... அதற்கு மாறாக, களிகூர்ந்து மகிழ்ச்சியே அடைகிறது!! நாம் கிறிஸ்துவின் சரீரத்தைக் "கண்டவர்களாய்" இருந்தால், இந்த இடது கையைப் போலவே, "முக்கியமான ஊழியங்களைச் செய்திடும்" மற்றொரு சகோதரன் நிமித்தம் களிகூர்ந்தே மகிழ்ந்திடுவோம்! கிறிஸ்துவின் சரீரத்தில், "தேவனே அவரவர்களுக்குரிய ஊழியத்தைத் தருகிறார்" என்பதை நாம் காணத் தவறுவதாலேயே பொறாமை வெளிப்படுகிறது (1 கொரிந்தியர் 12:18). கிறிஸ்துவின் சரீரத்தில், நம் ஒவ்வொருவருக்கும் உரிய ஸ்தானத்தை தேவனே சரியாய் தெரிந்து வைத்திருக்கிறார். ஆகவே, அவருடைய தெரிந்துகொள்ளுதலைக் குறித்து "யாதொரு குறைசொல்" நமக்கிருந்தாலும், அந்த குறைசொல் உண்மையில் தேவனுக்கு விரோதமான குறை சொல்லே ஆகும்!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! 'காயீனின்' பொறாமை வழியில் நாங்கள் சென்று யாரையும் 'கொலை' செய்யாதிருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments