📕 “இன்று அவருடைய சத்தம்”
🌸 முழு அர்ப்பணத்தில் தேவனின் பூரண பாதுகாப்பு!
யோவான் 17:23 இயேசு இவ்வுலகத்திற்காகவோ அல்லது மனுஷீகக் கிறிஸ்தவர்களுக்காகவோ (Carnal Christians) ஜெபிக்கவில்லை. மாறாக, "எல்லாவற்றையும்" வெறுத்துவிட்டு அவரைப் பின்பற்றிய 11-சீஷர்களுக்காகவே ஜெபித்தார்! இவர்களே, இம்மண்ணுலக மக்களும் மாம்ஷீகக் கிறிஸ்துவர்களும் கண்டுகொள்ள முடியாத "பிதாவின் அன்பின் பாதுகாப்பை" தங்கள் வாழ்வில் மெய்யாய் கண்டவர்கள்!
இன்று ஏன் அநேக கிறிஸ்தவர்கள் "மாம்ஷீகக் கிறிஸ்தவர்களாய்" இருக்கின்றனர்? ஏனெனில் பிசாசானவன், இவர்கள் தங்களை தேவனுக்கு பூரணமாய் ஒப்புக்கொடாமல் "இம் மண்ணுக்குரியதையும், விண்ணுக்குரியதையும் சேர்த்துப் பெற்றுக்கொண்டு" அதிக சந்தோஷமாய் இருக்கலாம் என அவர்களை சிந்திக்க வைத்து ஏமாற்றி இருப்பதால்தான்! ஆனால், இது ஓரு கொடிய வஞ்சகம்!! நாம் தேவனுடைய பரிபூரண அன்பை விசுவாசித்திருப்போமென்றால் "கொஞ்சம்கூட" நமக்கென்று ஏதும் "பதுக்கிக்கொள்ளாமல்" எல்லாவற்றையும் மனப்பூர்வமாய் அவருக்கு ஒப்புக் கொடுத்திருப்போம்! அப்படிச் செய்திருந்தால், பிலிப்பியர் 4:6,7-ல் வேதம் சொல்லுகிறது போல "எல்லா" பதட்டமான கவலைகளிலிருந்தும் நாம் "பரிபூரணமாய்" விடுதலையாகி இருப்போம்! ஆனால் மாம்ஷீகக் கிறிஸ்தவர்களோ, "எங்கே இந்தப் படகு நடுவில் புயலினிமித்தம் கவிழ்ந்துவிடுமோ" என்று எப்போதும் சந்தேகித்து சஞ்சலத்துடன் இருப்பார்கள்!
பிதாவின் பூரண அன்பில் பாதுகாப்பாய் இருந்த இயேசுவால் புயலினூடேயும் 'ஆழ்ந்த நித்திரையாய்' இளைப்பாற முடிந்தது. ஏனெனில் "இவ்விதமாக" பிசாசு தன்னை மூழ்கடிக்க ஒருக்காலும் முடியாது என இயேசு நன்றாய் அறிந்திருந்தார். ஏனெனில், அந்தப் பிதா இயேசுவை எப்போதும் கண்ணுறங்காமல் காவல் புரிகிறாரே! இவ்விதமாக, இயேசுவை நேசித்துக் காத்துக்கொண்டது போல பிதா நம்மையும் நேசித்துக் காக்கிறார் என்பதை நாம் அறிந்து கொண்டோம் என்றால் இவ்வாழ்க்கையின் மகத்துவம்தான் என்னே!!
🙏 ஜெபம்:
எங்களின் அன்பு தகப்பனே! எங்களை முழுமையாய் உம்மிடம் அர்ப்பணிக்காமல் உமது "பூரண" பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து, இன்றே எங்களை "முழுவதும்" அர்ப்பணிக்கிறோம்! இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபம் கேளும் பிதாவே, ஆமென்.
✍️ எழுதியவர்:
📖 "இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"
📕 "His Voice Today"
🌸 Complete Protection of God in our complete dedication!
In John 17:23 Jesus did not pray for this world or for Carnal Christians. Instead, Jesus prayed for the 11 disciples who hated "all things" and followed Him! Only these people had seen the true "protection of the Father's love" in their lives, which is invisible for the wordly people and the carnal Christians!
Today why are so many Christians are "fleshly Christians?" Because the devil deceived them by keeping the thinking that they would be more happy to "embrace both the belongings of the Earth and the Heaven" without committing themselves fully to God! But, this is a terrible deception!! If we had believed in the perfect love of God, we would have "willingly" confessed everything to Him, without hiding "even a little"! If so, we will be “perfectly” free from “all” anxiety, as the Bible says in Philippians 4:6,7! But carnal-minded Christians will always be skeptical about "whether the boat will sink in the middle of the storm"!
Jesus, who was secure in His Father's perfect love, was able to rest in the storm and 'sleep'. Jesus knew that the Devil could never able to drown him. Because the Father always watches over Jesus! Thus, if we realise that the Father who loved Jesus, is also protecting us, then what a greatness of this life!!
🙏 Prayer:
Dear Father! Realizing that there is no "perfect" protection without surrendering ourselves "completely" to you, we dedicate ourselves today! Praying in the name of Jesus the Savior, Amen.
✍️ Author:
📖 _Translated version of the Tamil "Family Meditation Book"
0 Comments