இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 15
🔸️ எந்நிலையிலும் மகிழ்ச்சி இழக்காத ஜீவியம்! 🔸️
"சில சமயங்களில் நாம் திடீரென்று பணத்தை இழக்கவோ அல்லது மனசாட்சியற்ற மக்களால் ஏமாற்றப்படவோ" தேவன் ஏன் அனுமதிக்கிறார்? நம்மில் அநேகர் நெரிசலான புகைவண்டியில் அல்லது பஸ்களில், நம் பணம் "பிக்பாக்கெட்" அடிக்கப்படும் அனுபவத்தையும் அடைந்திருக்கிறோம். நானோ, இவ்விதமான நேரங்களை இந்தத் திருடர்கள் அல்லது ஏமாற்றுக்காரர்களுக்காய் ஜெபிக்கும் நல்ல தருணமாகவே எடுத்துக்கொள்கிறேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் விரும்புவதெல்லாம், பணத்தோடும், உலகப் பொருட்களோடும் உள்ள நம்முடைய அசாதாரணமான பிடிப்பிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதேயயாகும்!
நாம் இழந்த ஒவ்வொரு ரூபாயையும் விரல்விட்டு எண்ணி ஏங்கிக் கவலை கொள்ளவோ அல்லது நாம் லாபமடையும் ஒவ்வொரு பணத்திற்காகவும் மகிழ்ச்சியடையவோ தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை! ஆம், நாம் "அவரில்" களிகூர்ந்து மகிழ்ந்திருக்கவே அவர் விரும்புகிறார். இந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டது? உலக லாபம் கிடைத்துவிட்டதால் கூடவோ, அல்லது உலக நஷ்டத்தால் சற்றும் குறையவோ முடியாத மாறாத மகிழ்ச்சி!
இப்பூமியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்விதமாய்த்தான் நடந்துகொண்டார். இப்போது நாமும் அவர் நடந்தபடியே நடப்பதற்கு அழைக்கப்படுகிறோம். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (பிலிப்பியர் 2:5) என்றல்லவா வேதம் கூறுகிறது.
இயேசு கிறிஸ்துவுக்கு யாராவது, அவருடைய ஊழியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதினிமித்தம் நன்றியுணர்வோடு "பத்தாயிரம் ரூபாய்" கொடுத்திருப்பார்கள் என்றால், இச்செயல் அவருடைய சந்தோஷத்தை இம்மி அளவுகூட அதிகரிக்க முடிந்திருக்காது! ஏனெனில் அவர் பிதாவின்மேல் வைத்த சந்தோஷம் "ஏற்கனவே" நிறைந்ததாகவும், வழிந்தோடுவதாகவும் இருந்தது!! அதுபோலவே, உலகப் பொருட்களின் நஷ்டத்தாலும் அவருடைய சந்தோஷம் குறைந்திட முடியாததாய் இருந்தது! இயேசுவுக்கு அன்பளிப்பாய் வந்த அதிகமான பணத்தை யூதாஸ்காரியோத்து சுரண்டி சுரண்டி திருடிக் கொண்டிருந்தான். இயேசுவும் இதை நன்கு அறிந்திருந்தார். அவர் யூதாஸ்காரியோத்துக்காக மனம் வருந்தினாலும், தான் இழந்த பணத்திற்காக ஒருபோதும் 'மனக்கிலேசம்' அடையவேயில்லை!
ஜெபம்:
நேச பரம பிதாவே! "உம்மில் மகிழ்ந்திருக்கும்" நிலையான மகிழ்ச்சியே எனக்கு வேண்டும்! மாய உலக மகிழ்ச்சியிலிருந்து விடுபட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"
From:-



0 Comments