இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 19
🔸️ திராணிக்குமேல் நாம் சோதிக்கப்படுவதில்லை! 🔸️
நாம் ஆவிக்குரிய வளர்ச்சியற்று, பெலவீனமாய் இருக்கும்போது, மனுஷர் மூலமாகவோ பிசாசின் மூலமாகவோ கொடூரமாய் தாக்கப்பட தேவன் அனுமதிக்கவே மாட்டார். நம் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் நோக்கத்தின்மேல் நமக்கு விருப்பம் இல்லை என்பதை தேவன் காணும்போது, நம் ஜீவீயத்தில் நாம் மிக எளிதான பாதை செல்லவும் அனுமதித்து விட்டுவிடுவார்! இதன் விளைவாய் நாம்தான் நித்தியத்தில் பேரிழப்பைத் தழுவி நிற்போம்!!
ஏனெனில், "தாங்கிக்கொள்ள முடியும்" என்ற பக்குவநிலை அடைந்தவர்கள் மிகவும் சிலரே! இவ்வித ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைவதற்கு மிகச் சிலர்தான் விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.
நாம் சந்திக்கக்கூடிய எல்லா சோதனைகள் வழியாகவும், இயேசுவானவர் தன் பிதாவினால் அழைத்துச் செல்லப்பட்டார். இப்படித்தான் அவர் பூரணரானார்! (எபிரெயர் 4:15, 5:7-9) நாமும் பூரணராவதற்கு இதைத் தவிர வேறு வழியே இல்லை!
"நாம் திராணிக்கு மேலாக சோதிக்கப்படவோ அல்லது பரீட்சிக்கப்படவோ தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்" என்ற சத்தியமே நம் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் நாம் ஜெய ஜீவியம் செய்திட முடியும் என்ற நம்பிக்கைக்கு காரணமாயிருக்கிறது!! இவ்விதமாய் 1கொரிந்தியர் 10:13 மூலம் தேவனுடைய உத்திரவாதம் நமக்கு கொடுக்கப்படவில்லை என்றால், நாம் இப்படிப்பட்ட நம்பிக்கை கொள்ள முடியவே முடியாது!!
ஆம், நம் பாதைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு சோதனையும் பரீட்சையும் ஜெயிக்கப்படத்தக்கதே என்ற உத்தரவாதத்தை தேவன் நமக்கு அளித்திருக்கிறார். இவ்வாறிருக்க நாம் ஏன் வீழ்ச்சி அடைய வேண்டும்!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! நாங்கள் ஆவிக்குரிய வளர்ச்சி அடையும்படி நீர் அனுமதிக்கும் எந்த சோதனையும் எங்கள் திராணிக்கு மிஞ்சியது அல்லவே அல்ல என்பதை உணர்ந்தோம்! உமக்கே ஸ்தோத்திரம்!! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"
From:-
0 Comments