இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 20
🔸️ வாழ்வின் சுமை அகற்றும் தாழ்மையின் வழி! 🔸️
"வாழ்வின் சுமையானது" அதைத் தாங்க முடியாததாய் இருக்கிறது என்று நாம் எண்ணிக் கொள்ளுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நம்மைக் குறித்து வைத்துள்ள மேட்டிமை எண்ணங்களான பெருமைதான் இதற்கெல்லாம் காரணம்!
இதைக் குறித்து, ரிசர்வ் செய்யாத நெரிசலான புகைவண்டியில் பயணம் செய்யும் சமயங்களில் நான் தியானித்திருக்கிறேன். உட்காருவதற்கு இடமில்லாமல், தரையின் ஒரு மூலையில் உட்காரவோ அல்லது சில சமயங்களில் நின்றுகொண்டு வரவோ வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. புகைவண்டிப் பெட்டியோ, ஸ்டேஷன் ஆரம்பத்திலிருந்தே ஜனங்களாலும், சாமான்களாலும் நிறைந்திருக்கும். அடுத்து ஒவ்வொரு ஸ்டேஷனில் நிற்கும்போதும், மேலும் அதிக ஜனங்களும் சாமான்களும் ஏறுவதால் நிலைமை மிக மோசமாகிவிடும்! தொடர்ந்து நெருக்கடி அதிகமாகிக் கொண்டேதான் போகும்!! இச்சமயங்களில், "நான் இப்போது ஒரு எறும்பின் அளவாய் மாற முடியுமென்றால் எனக்கு இந்த நெரிசல் இருக்காதே!" என எனக்குள் சிந்திப்பதுண்டு. ஆம், 'அளவு நிமித்தமே' நெருக்கடி அதிகமாக இருப்பதை உணர்கிறேன். என்னைவிட பருமனான அளவு கொண்ட ஒரு மனிதனின் கதி இன்னமும் மோசமானதுதான்! நெருக்கடி எல்லாம் "அளவைப்" பொருத்தே இருக்கிறது. ஆனால் ஒரு சிறிய எறும்போ, நெரிசலான ரயில் பெட்டியையும் விசாலமான இடமாக கருதி, அங்குள்ள நெரிசலைக்குறித்து கொஞ்சமும் குறை கூறாது!
இதுவே ஆவிக்குரிய விடையையும் நமக்கு அளிக்கிறது. நெருக்கத்தின் சுமை என்னைச் சுற்றிலும் அதிகரிக்கும்போது, நான் மாத்திரம் என் கண்களுக்கு சிறியதாய். . . . சிறியதாய், மாற முடியுமென்றால், நெருக்கடியானது குறைந்து சீக்கிரமே ஒன்றுமில்லாமல் மறைந்துவிடும்!! தேவன் "நம்மைக் குறைத்து" சிறியதாய் மாற்றவே விரும்புகிறார். அவர் தன் நோக்கத்தை நம் மூலமாய் நிறைவேற்றுவதற்கு முன்பாக, நம்மைக் குறைத்து, குறைத்து நம்முடைய சுய எண்ணத்தில் "பூஜ்ய நிலைக்கு" நம்மை கொண்டுவர வேண்டியதாயிருக்கிறது.
பரிபூரண ஜீவனுக்குள் நடத்த, "நம்மை நாமே தாழ்த்தும்" இயேசு முன்நடந்த இந்த "இடுக்கமான வழியை" கண்டு கொண்டவர்கள் வெகு சிலராகவே இருக்கிறார்கள்!!
ஜெபம்:
இரக்கமுள்ள பரம தந்தையே! எம்மை ஜீவனுக்குள் நடத்தும் வழி இடுக்கமானதே ஆயினும், அதில் கெம்பீரமாய் நடந்து செல்ல "தாழ்மையின்" இரகசியத்தை அறிந்து கொண்டோம்!! உமக்கே ஸ்தோத்திரம்!! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"
From:-
0 Comments