இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 23
🔸️ சதி மேஜையை "சாத்தானுக்கே திருப்பி ஜெயம் தரும் தேவன்!" 🔸️
சாத்தான் தேவ ஜனங்களை தாக்கும்போது 'அவனுக்கு எதிராகவே' அத்தாக்குதலில் மேஜையை எவ்வாறு திசை திருப்புகிறார் என்பதைக் காண அநேகர் தவறுகின்றனர்!
உதாரணமாய், யோசேப்பின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைத் தியானித்து பாருங்கள்! அவன் 30-வயதாகும்போது, அவனை எகிப்தின் இரண்டாவது அதிபதியாக்கும்படி தேவன் ஒரு திட்டம் வைத்திருந்தார். யோசேப்பு கர்த்தருக்குப் பயந்த மனுஷனாயிருந்ததினால், அவன் மிகவும் வெறுக்கப்பட்டான்!
எப்படியாகிலும் யோசேப்பை அழிக்கும்படி அவனுடைய மூத்த சகோதரர்களை சாத்தான் தூண்டிவிட்டான்! தன் ஆசைக்கு இணங்காத யோசேப்பை பொய்யாய் குற்றம்சாட்டி போத்திபாரின் மனைவி அவனை சிறையில் அடைக்கும்படி செய்தான்!!
யோசேப்பை குறித்ததான தேவனுடைய கால அட்டவணைப்படி, சிறையிலிருந்த யோசேப்பிற்கு 30 வயதானவுடன், பார்வோனுக்கு ஒரு சொப்பனம் உண்டாகி.... "யோசேப்பு சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுகிறவன்" என்பதை 'பானபாத்திரக்காரன்' நினைவுகூர்ந்தான். இப்படித்தான் யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக வரவழைக்கப்பட்டு எகிப்தின் இரண்டாவது அதிபதியாக மாறினான்! அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கும்படி, சாத்தானின் சதி மேஜையை அவனுக்கு விரோதமாகவே திருப்புவது தேவனின் பெருமகிழ்ச்சியாகும்!
இந்நிகழ்ச்சிகளை, நம் வாழ்வின் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். "பொறாமையினால்" நம்மை வெளியே தள்ள முயற்சிக்கும் தீய சகோதரர்களிடம் நம்முடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? பொய்யாய் குற்றம் சுமத்திய அந்தப் பொல்லாத பெண்ணிடம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? அநீதியாய் சிறையில் அடைக்கப்பட்டதின் நிமித்தம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? உதவி செய்வேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு அதை மறந்து போகும் நண்பர்களின் நிமித்தம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? அவர்கள் வேண்டுமென்றோ - தற்செயலாகவோ செய்யும் எல்லாக் கிரியைகளையும், நம்முடைய வாழ்க்கையில் அவரது தீர்மானம் நிறைவேறும்படி தேவன் உபயோகிக்க முடியும் என்று நாம் விசுவாசிக்க முடிகிறதா? யோசேப்புக்கு அவ்வாறு நிறைவேற்றியிருந்தால், நமக்கும் அவ்வாறே நிறைவேற்றிட அவரால் முடியாதா? நிச்சயம் அவரால் முடியும்! அப்படியே நமக்கும் அவர் செய்திடுவார்!!
ஜெபம்:
அன்புள்ள பரம பிதாவே! உமது நோக்கம் எங்கள் வாழ்வில் நிறைவேற தடை செய்திட இவ்வுலகில் ஒருவரும் இல்லை! எதிலும் ஜெயம் தரும் ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி, ஆமென்!!
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"
From:-



0 Comments