இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 26
🔸️ தேவனுடைய விருப்பம் செய்வதே நமக்கு இளைப்பாறுதல்! 🔸️
தேவன் விரும்புவது எதுவோ அதுவே உங்கள் விருப்பமாயும் இருக்குமென்றால், எந்நிலையிலும் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது. நீங்கள் வைத்துக் கொள்ளும்படி தேவன் விரும்பாத எதையும் நீங்கள் வாங்குவதற்கோ, உரிமை கொள்வதற்கோ ஆர்வம் கொள்ளவில்லை என்றால், நீங்கள் எப்போதும் இளைப்பாறுதலில் இருக்கலாம். ஏனெனில், உங்களுக்கு தேவை இருந்தால் அதை அற்புதமாய் தேவன் வழங்கிடுவாரே! ஆனால் உலகப் பொருளின் மீது கொண்ட இச்சையை திருப்தி செய்வதற்காக 'இதையும் அதையும்' வாங்குவதற்கு விரும்புவீர்கள் என்றால், நீங்கள் எப்போதும் பிரச்சனைக்குள்தான் ஓடி நிற்பீர்கள்!!
இதே விசுவாசத்தின் அடிப்படைதான் நமக்குரிய வாழ்க்கைத் துணையைக் கண்டுகொள்ளும் விஷயத்திற்கும் பொருந்தும். "வீடும் ஆஸ்தியும் மாத்திரமே ஒரு தகப்பன் தன் மகனுக்கு தரமுடியும். ஆனால் புத்தியுள்ள மனைவியையோ கர்த்தர் மாத்திரமே அருள முடியும்" (நீதிமொழிகள் 19:14- Living Bible) என்றே வாசிக்கிறோம்.
உங்கள் வாழ்க்கைத் துணைவியாய் இருக்கும்படி தேவன் யாரையேனும் முன்குறித்து இருக்கும்போது "அந்த நபரை" வேறு யாரும் அபகரித்துச் சென்று விடுவார்கள் என்ற அபாயம் ஏற்படுமோ? நிச்சயம் இல்லை! நீங்கள் சர்வ வல்ல தேவனின் ஆளுகையை விசுவாசத்திருக்கும்வரை அந்த அபாயம் நிச்சயம் இல்லை!!
தேவனுடைய சித்தத்தின் எல்லைக்கு வெளியே உங்களுக்கு எந்தவித நோக்கமும் இல்லாமல், தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டு 'நீங்கள் தனித்திருக்கவும்' ஆயத்தம் என்றால், இப்போது நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. தங்களுக்குரிய எல்லாவற்றையும் அவரிடம் ஒப்புவித்தவர்களுக்காக கிரியை செய்யும்படி தேவனுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது (2 நாளாகமம் 16:9). ஓ, நமக்குத்தான் எவ்வளவு அருமையான தேவன் இருக்கிறார்!
ஜெபம்:
எங்கள் பிரியமுள்ள தந்தையே! "உம் சித்தம் ஒன்றே" செய்வது இப்பூமியில் எத்தனை இளைப்பாறுதல்! எங்கள் சுய சித்தத்தின் சிக்கலுக்குள் சிக்கி விடாதிருக்க தயை புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments