Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 29

 இன்று "அவருடைய" சத்தம்


ஜனவரி 29


🔸️ சாத்தானின் தீமைகளை நன்மையாக மாற்றும் தேவன்! 🔸️


"இவ்வுலகத்தின் எல்லா தீமைகளுக்கும் சாத்தான்தான் காரணம் என்றால், சாத்தானையும் எல்லா ஆவிகளையும் தேவன் ஏன் அழிக்காமல் வைத்திருக்கிறார்?" என்ற கேள்வியை நாம் கேட்கக்கூடும்.


தேவன் விரும்பினால் சாத்தானை ஒரு நொடிப்பொழுதில் நிச்சயமாய் அழித்துவிட முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! சாத்தானையும் அவனோடு இருக்கும் பிசாசுகளையும் அனுமதித்திருக்க வைத்திருப்பதில் ஒரு தெளிவான நோக்கத்தை தேவன் வைத்திருக்கிறார். அவ்வித அவருடைய நோக்கத்தின் ஒரு பகுதி யாதெனில், இப்பூமிக்குரிய வாழ்க்கையை மனிதனுக்கு கடினமானதாகவும், பாதுகாப்பற்றதாகவும், அபாயம் நிறைந்ததாகவும் செய்வதற்கு சாத்தானையே தேவன் உபயோகப்படுத்துகிறார்!


அது ஏனென்றால் "இதன் மூலமாய்" ஜனங்கள் இப்பூமிக்குரிய சொகுசான வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டுவிடாமல், தேவனிடத்தில் திரும்பவும் நித்திய வாழ்க்கையில் அக்கறை கொள்ளவுமே ஆகும்! இதற்கு மாறாக, இப்பூமிக்குரிய வாழ்க்கை எந்த நோயும் இல்லாமலும், துன்பம் இல்லாமலும், தரித்திரம் இல்லாமலும், ரொம்பவும் சொகுசான வாழ்க்கையாக இருக்குமென்றால், தேவனைக் குறித்த சிந்தை கிட்டத்தட்ட ஒருவருக்குமே ஏற்படாது! இதனிமித்தமே இவ்வுலகில் பாதுகாப்பற்ற ஜீவியத்தையும், துன்பங்களையும், தேவன் உபயோகித்து, .... 'இதுபோன்ற தேவையான நேரத்தில்' நாம் அவரிடத்தில் திரும்பவும், அவரை சிந்தித்துத் தேடவும் வைக்கிறார்!


எனவே சுகமாக்க முடியாத வியாதிகள், சுகவீனங்கள், வறுமைகள் இன்னும் இதுபோன்ற உலகத்தில் காணும் தீமைகளைத் தேவன் உபயோகித்து அதன் மூலம் ஜனங்களை பாவங்களிலிருந்து மனம் திரும்பும்படிச் செய்கிறார். முடிவில், ஜனங்கள் பரலோகத்தில் உள்ள தங்கள் நித்திய வீட்டை கண்டு கொள்ளும்படி தேவன் நடத்துகிறார்!


ஆம், இவ்விதமாகவே சாத்தானை திரும்பத் திரும்ப ஒரு 'முட்டாளாய்' தேவன் நிற்க வைத்து விடுகிறார். சாத்தான் பிறருக்காக "எதையோ மனதில் வைத்து" வெட்டின குழியில் அவனே அக்குழியில் தள்ளப்பட்டு விடுகிறான்! 


ஜெபம்:

இரக்கமுள்ள எங்கள் பரம பிதாவே! இம்மண்ணின் மாயையில் சிக்கிவிடாமல், சாத்தானின் தீமையை அனுமதித்து எங்களை உம்மிடம் திருப்புகிறீரே.....உம் அனந்த ஞானத்திற்கே ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments