இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 1
🔸️ எக்காலத்தும் தேவனை சார்ந்திருப்பதே விசுவாசம்! 🔸️
'தேவன் மேல் விசுவாசம் வைப்பது' என்பதற்குப் பொருள் யாதெனில், அவரையே முழுமையாய் சார்ந்து கொண்டு அவர்தம் வார்த்தையில் கூறிய எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதே ஆகும்! அதாவது, நம் உணர்வுகள் என்னதான் கூறினாலும் அல்லது வேறு யாரோ என்னதான் மறுத்தாலும் அவைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பது ஆகும். இது அவ்வளவாய் மிக எளியதேயாகும்!
தேவன் மீது விசுவாசம் வைக்கும்பொருட்டு, அவரைக் குறித்த குணாதிசயத்தில் மூன்று தன்மைகளை வேதத்தில் நாம் காண்கிறோம். 1) அவர் நம்மை சொல்ல இயலாத சிநேகத்தால் அன்பு கூறுகிறார். 2) அவரே சம்பூர்ண ஞானம் உள்ளவர். 3) அவரே சர்வ வல்லமை உள்ளவர்! இவ்வாறு அவரைக் குறித்த இந்த மூன்று உண்மைகளை நாம் விசுவாசிப்பது கஷ்டமான காரியமா? இல்லவே இல்லை! அப்படியானால், நாம் அவரை முழு இருதயத்தோடு நம்பி விசுவாசிப்பதற்கு இனியும் கஷ்டம் என்று சொல்லாதிருப்போமாக!!
ஏதேன் தோட்டத்தில் சாத்தானின் குரலுக்கு என்று ஏவாள் செவிகொடுத்தாளோ, அன்றே விசுவாச வீழ்ச்சி ஏற்பட துவங்கியது. தன்னுடைய நன்மைக்காகவே தேவன் கற்பனைகளை கொடுத்திருக்கிறார் என்பதை விசுவாசிக்க அன்று தவறிவிட்டாள். இவ்விதம் தேவன் அவள்மீது வைத்திருந்த 'பூரண அன்பில்' ஏவாளுக்கு விசுவாசம் இல்லாதபடியால், அவள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனாள்!
நாம் விசுவாசத்தின் மூலமாகவே தேவனுடைய ஈவுகளைப் பெற்றிட முடியும். நமக்கு கொடுப்பதற்கென தேவனிடம் அநேக அற்புதமான ஈவுகள் உள்ளன! அவர் அளிக்கும் ஈவுகள் யாவும் கிருபையின் ஈவுகளே ஆகும். ஆனால் இப்பரம ஈவுகளைப் பெறுவதற்கோ விசுவாசம் நமக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது.
"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம்" (எபேசியர் 2:8) என்றே சத்திய வேதம் கூறுகிறது. உன்னதத்தின் திரளான ஆசீர்வாதங்களை ஏந்திக்கொண்டு நம்மை நோக்கி ஏகிவரும் தேவனுடைய கரமே கிருபை ஆகும்! தேவனுடைய கரத்தில் பொதிந்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும்படி மேல்நோக்கி உயர்த்திடும் நம் கரமே விசுவாசமாகும்!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! எங்கள் மீது நீர் கொண்ட மாறாத அன்பிற்கு தந்தருளிய உமது கற்பனைகளை 'எக்காலத்தும்' நம்பியிருக்கும் விசுவாச ஜீவியத்தை எங்களுக்குத் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments