Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 02

இன்று "அவருடைய" சத்தம்


பிப்ரவரி 2


🔸️ "நான் தேவனுடைய பிள்ளை" என உறுதியாய் விசுவாசித்திட வேண்டும்! 🔸️


"நாம் அவருடைய பிள்ளைகள்" என நம் இருதயத்தில் சம்பூரணமான உறுதி கொண்டிருக்கவே தேவன் விரும்புகிறார். இந்த உண்மையைக் குறித்து நாம் சந்தேகத்திற்குள் பிரவேசிக்க தேவன் ஒருபோதும் விரும்புவதே இல்லை.


நம்மைச் சந்தேகத்திற்குள் தள்ளும்படி, சாத்தானே சதா முயற்சித்துக் கொண்டிருக்கிறான். நாமோ சந்தேகத்திற்குள் பிரவேசிக்க தேவையே இல்லை! ஏனெனில், நமது சந்தேகங்களை அழித்து நமக்கு உறுதி செய்யும்படி அநேக வாக்குத்தத்தங்களை தேவன் தன் வார்த்தையில் தந்தருளியுள்ளார்!


அவ்வித வாக்குத்தத்தங்களில் ஒருசிலவற்றை சற்றே நோக்குங்கள்:


1) "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. 

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" 

(யோவான் 6:37,47) என இயேசுவே கூறினார். 


2) "அவரை (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை) ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்" (யோவான் 1:12).


3) மேலும், "நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்றும் ஆண்டவர் கூறினார் 

(எபிரேயர் 8:12).


தேவனுடைய வாக்குத்தத்தங்களில் விசுவாசம் வைப்பதென்பது ஒரு நதியை கடப்பதற்காக கட்டப்பட்ட வலுவான பாலத்தின்மீது நடக்கும்படி நம் கால்களை வைப்பதற்கே ஒப்பாகும்! நம்முடைய கால்கள் பலவீனமானதாக இருக்கலாம்! அதனாலென்ன?.... பாலம் உறுதியானதாக இருந்தால், அது போதுமே! இப்போது எது உறுதியான விசுவாசம் என்பதற்கு நீங்களே பதில் கூறுங்கள்: ஆம், "ஒரு வலுவான தேவனையும் அவர் அளித்த வாக்குத்தத்தங்களையும் முழுவதுமாய் நம்பிச் சார்ந்து கொள்வதே" உறுதியான விசுவாசம் ஆகும்!!   


ஜெபம்:

இரக்கமுள்ள எங்கள் பிதாவே! எங்களை நீர் பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்ட வாக்குத்தத்தங்கள் உறுதியாய் இருப்பதால், 'இனியும்' வீண் சந்தேகம் எங்களை அலைக்கழிக்காதிருக்க கிருபை செய்தருளும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



 

Post a Comment

0 Comments