Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 03

 இன்று "அவருடைய" சத்தம்


பிப்ரவரி 3


🔸️ "தனக்கானதை தேடாத" ஆவிக்குரிய வளர்ச்சி! 🔸️


"பிள்ளை வளர்ந்து.... ஞானத்தினால் நிறைந்தது" (லூக்கா 2:40). நாசரேத் ஊரில் இயேசு வாழ்ந்த 30 ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக ஞானத்தில் வளர்ந்தார்! அவருடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாமல் ஒரு நாள்கூட வீணாகவில்லை எனக் கூறுவதே உண்மையாகும். இவ்வாறு ஜீவிப்பவனே முழு இருதயம் கொண்டவன் என நாம் கூறிட முடியும். அதாவது, இயேசுவைப் போலவே தன் வாழ்விலும் தேவசித்தம் முழுவதும் நிறைவேறும் பொருட்டு தன் ஜீவிய நாட்களை முழுமையாய் பயன்படுத்திக் கொண்ட ஒரு மனிதன்!


ஒரு மனிதனின் ஆவிக்குரிய வளர்ச்சியை கோபம், அசுத்த சிந்தை, பொய் சொல்லுதல்..... போன்ற பாவங்களை அவன் ஜெயித்து வாழ்ந்த வாழ்க்கையை மட்டும் வைத்து கணக்கிட முடியாது. கனி மெய்யாகவே நல்லதாக இருப்பதற்கு முன்பாக மரம் நல்லதாக இருக்கவேண்டும்! கோபத்தையும் பாலியத்திற்குரிய பாவங்களையும், பொய்யையும்...... ஜெயித்து வாழ வேண்டிய முக்கியத்துவத்தை புறஜாதியாரின் மார்க்கங்கள்கூட வலியுறுத்துகிறதே! காரியம் இவ்வாறாக இருப்பதால், நாம் எந்த அளவு "தனக்கானதைத் தேடும்" சுபாவத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறோம் என்பதை வைத்தே நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி கணக்கிடப்படுகிறது!


நம் எல்லா பாவங்களுக்கும் 'ஆணிவேராக' நிற்கும் பிரதான பாவமே 'தனக்கானதைத் தேடும்' பாவமாகும். நம் புகழ், நம் பெயர் பிரஸ்தாபம் நம் சொந்த ஆதாயங்கள் எனத் தேடுவதே தனக்கானதைத் தேடும் கொடிய சுபாவமாகும்!!  


சார்லஸ்பின்னி, "ஒரு மனிதன் எதற்காக வாழ்ந்தான் என்ற முடிவே அவன் பாவியா அல்லது பரிசுத்தவானா என்பதை நிர்ணயம் செய்கிறது" என தீர்க்கமாய் கூறினார். நம்முடைய சில செய்கைகளோ அல்லது நாம் பேசிய சில வார்த்தைகளோ அல்ல, மாறாக..... நம் ஜீவியத்தின் அடித்தள நோக்கம் என்ன என்பதை வைத்தே நாம் முழு இருதயம் கொண்ட இயேசுவின் சீஷர்களாய் இருக்கிறோமா? அல்லது இல்லையா? என்பதை நிரூபணம் செய்கிறது.


உங்கள் வாழ்க்கை "தேவனுடைய மகிமையைத் தேடுவது ஒன்றே என் விருப்பம்!" என்பதாக இருக்குமென்றால் மாத்திரமே, நீங்கள் தனக்கானதைத் தேடும் தீமையிலிருந்து விடுதலையாகி இருக்கிறீர்கள் என அறிந்து கொள்ள முடியும்.   


ஜெபம்:

எங்கள் பரலோக பிதாவே! "தனக்கானதை தேடாத" வாழ்க்கையே மெய்யான ஆவிக்குரிய வளர்ச்சி என்பதைக் காண உதவி செய்தமைக்கு நன்றி! நாங்களும் அந்த வளர்ச்சி அடைய அருள் புரிந்தருளும்!! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday





Post a Comment

0 Comments