Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 08

 இன்று "அவருடைய" சத்தம்


பிப்ரவரி 8


🔸️ மரணம் நித்தியத்திற்குள் நம்மை நடத்தும் படியே ஆகும்! 🔸️


கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்தபடியால் இப்போது ஓர் உண்மையான இயேசுவின் சீசனுக்கு மரணம் ஓர் அச்சுறுத்தும் பயங்கரம் அல்ல! ஆம், மரணம் நமக்கு ஒரு தோற்கடிக்கப்பட்ட சத்துருவே ஆகும்!! இயேசு மரித்து தன் மரணத்தினால் சாத்தானின் வல்லமையை உரிந்து போட்டதால், இனியும் நாம் மரணபயம் கொண்டிருக்க அவசியமில்லை என சத்தியவேதம் வெற்றிக் களிப்போடு நமக்கு எடுத்தியம்புகிறது (எபி.2:14,15). இனிமேல், அவருடைய சீஷர்களுக்கு இயேசு மாத்திரமே மரணத்தின் வாசலைத் திறந்திட முடியும்! அவர்களைச் சாத்தான் 'தொடக்கூட' முடியாது!   


ஒரு மனிதன் மரிக்கும்பொழுது என்ன சம்பவிக்கிறது? ஐசுவரியவானையும், லாசருவையும் குறித்துப் பேசப்படும்பொழுது, இயேசு தெளிவாக இக்கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். இச்சத்தியங்களை அறிந்து கொள்வதற்கு முன்பாக, நீங்கள் சற்று அமர்ந்து, சிறிது நேரம் செலவழித்து, லூக்கா 16:19-31 வசனங்களை கவனமாய் வாசியுங்கள். 


இந்நிகழ்ச்சி ஓர் உவமானமல்ல! எந்த உவமானத்திலும் இயேசு யாருடைய பெயரையும் குறிப்பிட்டதில்லை. ஆனால், இந்நிகழ்ச்சியிலோ இயேசு பெயரைக் குறிப்பிட்டு பேசினார். ஐசுவரியவானும், லாசருவும் இஸ்ரவேல் தேசத்தில் உயிரோடு வாழ்ந்தவர்களாவார்கள்!!


நாம் வாசித்த லூக்கா 16-ம் அதிகாரத்தின் நிகழ்ச்சியில், மரித்தவர்கள் செல்லும்படி 'இரு ஸ்தலங்கள்' மாத்திரமே உண்டு என்பதை இயேசு தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். 1) ஆபிரகாமின் மடி, இதை 'பரதீசு' Paradise என்றும் வேதம் அழைக்கிறது. 2) நரகம். இந்த ஸ்தலம் கொடிய வாதையும் வேதனையும் நிறைந்த இடமாகும். ஒரு மனிதன் மரித்தவுடன், இப்பூமியில் அவனுடைய சரீரம் அடக்கம் பண்ணப்படுவதற்கு முன்பாகவே அவனுடைய ஆத்துமா இந்த இரு ஸ்தலங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு உடனடியாகச் செல்கிறது! அவன் செல்லும் ஸ்தலத்தில், தன்னைச் சுற்றி சம்பவிக்கும் யாவையும் அறிந்து கொள்ளும்படி அவன் உணர்வுள்ளவனாகவே இருப்பான்! ஒரு சரீரத்தை உடையவனாய் அவன் இல்லாதிருந்தும், ஆறுதலையோ அல்லது வேதனையையோ உணரும் நிலையில்தான் இருப்பான்!!


திரித்துவத்தைப் போலவே, மனிதன் ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் கொண்டவனாக இருக்கிறான் (1தெச.5:23). மரணத்தின்போது, ஆவியும் ஆத்மாவும் சரீரத்தை விட்டுப் பிரிந்து, பரதீசிக்கோ அல்லது நரகத்திற்கோ செல்லுகிறது!   


ஜெபம்:

பரம பிதாவே! மரணம், நித்தியத்திற்குள் எங்களை நடத்தும் படி அல்லது வாசல் என அறிந்தோம்! நித்திய ஜீவனை எங்களுக்கு அருளிய இரட்சகர் இயேசுவுக்கே ஸ்தோத்திரம்! ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments