இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 12
🔸️ நம் வாழ்வில் தெய்வ அன்பே முதலிடம் பெறவேண்டும்! 🔸️
நம்முடைய உறவினர்களோடு நாம் வைத்திருக்கும் சுபாவமாய் கொண்ட 'அசாதாரண' அன்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே சீஷத்துவத்தின் முதல் நிபந்தனையாகும் (லூக்கா 14:26).
அப்படியானால், நாம் அவர்களை நேசிக்கக்கூடாது என்பதா பொருள்? இல்லை! நிச்சயமாய் இல்லை!! நம்முடைய மனுஷீக அன்பை நாம் இழக்கும்போது, அந்த இடத்தை தேவன் தன்னுடைய தெய்வீக அன்பினால் நிறைத்துவிடுவார்! இங்குதான் நம்முடைய உறவினர்களை நாம் நேசிக்கும் அன்பு தூய்மை அடைகிறது. ஆம், நம்முடைய நேசத்திற்கு எப்பொழுதும் தேவனே முதலிடம் வகித்திட வேண்டும்..... மாறாக, உறவினர்கள் அல்ல!
இந்த முதல் நிபந்தனைக்கே இன்று அநேகர் தேவனுக்கு கீழ்ப்படியவில்லை! ஆண்டவரோ, நம் ஜீவியத்தில் நாம் அவருக்கு முதலிடம் தரும்படியே கட்டளையிடுகிறார். அவ்விதமாய் நாம் அவருக்கே முதலிடம் தராவிட்டால், அவருடைய சீஷர்களாய் ஒருக்காலும் இருந்திடவே முடியாது!
இதற்கு, இயேசுவையே மாதிரியாக நோக்கிப் பாருங்கள். அவர், தன் விதவையான தாய்மீது கடைசிவரைக்கும் பொறுப்புள்ள அக்கறை கொண்டிருந்தார். அவ்வாறிருந்தும், தான் பிதாவின் பரிபூரண சித்தம் செய்து முடிப்பதற்கு தடையாக, சிறு விஷயத்தில்கூட தன் தாய் தன்னை இடைமறித்திட அவர் ஒருபோதும் அனுமதிக்கவே இல்லை!
இதற்கு, கானா ஊர் கலியாணம் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. அக்கலியாணத்தில், தன் தாயின் தூண்டுதலின்படி ஒன்றைச் செய்திட மறுத்துவிட்டார்! (யோவான் 2:4).
இயேசுவின் சிநேகத்திற்கு, பிதாவானவரே எப்போதும் முதலிடம் பெற்றிருந்தார். அவரைப்போன்ற மனோபாவத்தையே நாமும் பெற்றிருக்க இயேசு வாஞ்சிக்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தபின்பு பேதுருவைப் பார்த்து, "பேதுருவே, இவ்வுலகத்திலுள்ள எதைக் காட்டிலும் நீ என்னை அதிகமாய் நேசிக்கிறாயா?" (யோவான் 21:15-17) என உருக்கமாய் கேட்டார்!
சங்கீதக்காரன் கூறியதைப்போலவே, "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" (சங்கீதம் 73:25) என நாமும் நம்முடைய மனதாரக் கூறிட முடியுமா? அங்ஙனமே நாம் கூறிவிட்டால், நாம் உண்மையாகவே சிஷத்துவத்தின் முதல் நிபந்தனையை மகிழ்வுடன் நிறைவேற்றியவர்களாய் இருப்போம்!!
ஜெபம்:
பேரன்பு கொண்ட எங்கள் பரம பிதாவே! மானிட அன்பில் உழன்ற எங்களை விடுதலையாக்கி உம்மையே பிரதானமாய் நேசிக்கும் சீஷத்துவ வாழ்க்கைக்கு எங்களை அர்ப்பணிக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments