Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 19

 இன்று "அவருடைய" சத்தம்


பிப்ரவரி 19


🔸️ நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திட வேண்டும்! 🔸️


ஏதோ ஒரு நேரத்தில் சம்பவித்த 'எரிச்சலின் சம்பவம்' ஒன்றும் நம்மை தீயவனாய் மாற்றுவதில்லை! மாறாக, ஜீவகாலமெல்லாம் நமக்குள் வாசமாய் இருந்த தீமைகளைத்தான் "இந்த எரிச்சலூட்டும் சம்பவம்" மேல்மட்டத்திற்கு கொண்டுவந்து விட்டது. அவ்வளவுதான்!!


இதைக்குறித்து, ஏமி கார்மைக்கேல் அம்மையார் கூறும்போது, "ஒரு கப் நிறைய உள்ள தித்திப்பான தண்ணீருக்கு, எவ்வளவுதான் அதிர்ச்சி ஏற்பட்டு சிதறி விழுந்தாலும், சிதறி விழுந்த அந்த தண்ணீரில் ஒரு சொட்டாகிலும் கசப்பு நீராய் மாறிவிடக்கூடுமமோ?" என்றார். ஆகவே, நம்முடைய ஜீவியத்தில் கசப்பான நீர் நம் உதடுகளில் வந்துவிட்டால், அந்த "கசப்பு" ஏற்கனவே பாத்திரத்தில் இருந்தது என்பதுதான் உண்மை! 'இப்போது' எரிச்சல் மூட்டிய சம்பவம் ஒன்றும் நம்மை கசப்பாய் மாற்றிவிடவில்லை! அல்லது 'திடீரென' நம்மை ஆவிக்குரியவர்-அற்றவர்களாய் மாற்றிவிடவும் இல்லை. ஆம், 'ஏற்கனவே' நமக்குள் இருந்ததை மாத்திரமே இப்போது சம்பவித்த நிகழ்ச்சி வெளியே கொண்டு வந்திருக்கிறது.  


ஆகவே, நம் கறைப்பட்ட சொந்த ஜீவியத்திலுள்ள குணாதிசயத்தை வெளியே கொண்டு வருவதற்கு இது போன்ற சம்பவங்களை அனுமதித்த தேவனுக்காக நாம் மிகுந்த நன்றி உள்ளவர்களாகவே இருக்க வேண்டும்! இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காவிட்டால், நமக்குள் ஒரு கறைப்பட்ட ஊற்று இருப்பதையும், நம் மாம்சத்திற்குள் ஒரு நன்மைகூட வாசமாயில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளவே முடியாது!!


'அடக்கிக் கொள்வதே' ஜெயம் என்று கருதினால், விற்பனை செய்யும் வியாபாரிகளைக்கூட "கிறிஸ்துவை போன்றவர்கள்" என நாம் கூறிவிடலாம்! ஏனெனில், இவர்களின் வாடிக்கையாளர்கள் இவர்களின் பொறுமையை எவ்வளவுதான் சோதித்தாலும் "தங்கள் வியாபாரத்திற்காக" தங்கள் வெளித்தோற்றத்தில் மிகுந்த அன்புள்ளவர்களைப் போலவே காட்சியளிப்பார்கள்..... ஆனால், அவர்களுக்கு உள்ளேயோ 'எரிச்சலினால்' கொதித்துக் கொண்டிருப்பார்கள்!!


ஆம், அடக்கிவைத்துக் கொள்வது ஒருபோதும் ஜெயமாகாது! நாம் 'விடுதலையானது போன்ற' வெறும் தோற்றத்தையோ அல்லது 'ஆவிக்குரியவர்களைப் போன்ற' தோற்றத்தையோ தேவன் விரும்பாமல், நாம் "உண்மையாகவே விடுதலை" பெற்றிடவே தேவன் விரும்புகிறார். இதைப் பவுல் கூறும்போது, "இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" (கலாத்தியர் 2:20) என்றே கூறினார். இந்த ஒப்பற்ற நிலைக்கு நம்மைக் கொண்டுவரவே தேவன் விரும்புகிறார்.        


ஜெபம்:

பரம தந்தையே! கறைபட்ட நான் சிலுவையில் அறையுண்டு, கிறிஸ்து என்னில் வாழ்ந்திட கிருபை புரிந்தருளம்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

1 Comments