Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 20

இன்று "அவருடைய" சத்தம்


பிப்ரவரி 20


🔸️ "சுய-அன்பு" கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும்! 🔸️


சுயத்தை மையமாகக் கொண்டவன், தன் சக மனிதர்களிடம் ஒரு மெய்யான அன்புடையவனாய் 'இருக்கவே மாட்டான்'. அவன் பிறரிடம் கடின மனப்பான்மையோடு நடப்பதற்கு "இந்த அன்பற்ற தன்மையே" மூலகாரணமாய் இருக்கிறது. அதிக அன்பைக் காட்டுவதுபோல் அவன் பாவனை செய்தாலும், கிறிஸ்துவைப் போன்ற மெய்யான அன்பு அவனுக்குள் இருக்காது! 


உவமையில் கூறப்பட்ட மூத்த குமாரன், தகப்பனின் வீட்டை விட்டுச் சென்ற கெட்ட குமாரனைத் தேடுவதற்காக கடந்த ஆண்டுகளில் ஒருமுறைகூட தன் தகப்பனிடம் சென்று கேட்டதில்லை! தன்னுடைய சகோதரன் மரித்துவிட்டானா? அல்லது உயிரோடு இருக்கிறானா? என்ற அக்கறை கூட ஒரு துளியும் அவனிடம் காணப்படவில்லை! அவனுடைய முழு ஆர்வமும் "தன் சினேகிதரோடு சந்தோஷமாய் இருக்க வேண்டும்" என்பது மாத்திரமே ஆகும் (லூக்கா 15:29). அவனைப் பொறுத்தவரையில் "தான் சந்தோஷமாய் இருக்கவேண்டும்!" அவ்வளவுதான்.


நம்மை மாத்திரமே சுற்றிச் சுற்றி வந்து நாம் வாழ்கிறோமல்லவா? பின்மாற்றக்காரர்களை குறித்து நமது மனநிலை என்ன?


இந்த உவமையில் நாம் காணும் இளைய குமாரன் ஒரு பின்மாற்றக்காரனாகவே இருக்கிறான்! ஆகவே, அவனை மிக எளிதில் ஆக்கினைக்குள்ளாக்கித் தீர்த்திட முடியும். இவ்வேளையில், ஓர் அவிசுவாசியை அன்புகூருவதுகூட எளிது. ஆனால் ஒரு பின்மாற்றக்காரனை அன்புகூர்ந்து அவனுக்கு உதவி செய்வதுதான் அதிகக்கடினம்!! இதைக் குறித்து வேதம் கூறும்பொழுது, "உன் கிறிஸ்தவ சகோதரன் ஒருவன் யாதொரு பாவத்தில் அகப்பட்டிருந்தால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களை தூக்கி எடுத்து சரியான பாதைக்கு சீர்பொருந்தப் பண்ணுங்கள்" (கலாத்தியர் 6:1-Living Bible) எனக் கூறுகிறது.  


அதேபோல் 1யோவான் 5:16 குறிப்பிட்டு "உன் கிறிஸ்தவ சகோதரன் பாவம் செய்வதை நீங்கள் கண்டால், தேவன் அவனுடைய பாவங்களை மன்னித்து அவனுக்கு ஜீவனைத் தரும்படி நீங்கள் ஜெபம் செய்ய வேண்டும்" எனவும் கூறுகிறது. இவ்வாறு வீழ்ச்சி அடைந்தவர்களுக்காக நாம் எப்போதாவது ஜெபித்திருக்கிறோமா? நம்மில் அநேகர் இந்த ஜெபத்தை ஜெபிப்பதில்லை! அதற்கு ஒரே காரணம், நாம் அவ்வளவாய் நம் சுய-நலத்தில் மையம் கொண்டு வாழ்கிறோம் என்பதுதான்!!   


ஜெபம்:

இரக்கமுள்ள எங்கள் தந்தையே! "சுய-அன்பு" இவ்வளவு ஆழமாய் எங்களில் இருப்பதைக் காண உதவி செய்தீர்! பிறரை நேசிக்கும் மெய்யான "தன்னலமற்ற அன்பை" எங்களுக்குத் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



 

Post a Comment

0 Comments