இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 24
🔸️ "பரிசுத்தாவி அபிஷேகத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும்!" 🔸️
நமக்குள் வந்திருக்கும் பரிசுத்தாவியின் கிரியையை வேதாகமம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: "நாம் இயற்கையாகவே தீமைகள் செய்வதற்கே அதிக விருப்பம் கொண்டிருக்கிறோம்! அந்த விருப்பம் பரிசுத்தாவியானவர் நாம் செய்யும்படி கூறுகின்ற விருப்பத்திற்கு முற்றிலும் விரோதமானதேயாகும்! அதேபோல், பரிசுத்தாவியானவர் நமக்குள் கிரியை செய்திட விரும்பும் விருப்பங்கள், நம்முடைய இயற்கையான விருப்பங்களுக்கு முற்றிலும் விரோதமாகவே இருக்கிறது!! இவ்வாறு நம் சுய-வாழ்க்கை என்ற சத்துவமும், பரிசுத்தாவியின் சத்துவமும் தொடர்ச்சியாக ஒன்றுக்கொன்று விரோதமாய் யுத்தம் செய்து..... இந்த இருவரில் ஒருவர் யுத்தத்தில் ஜெயித்து நம்மை ஆளுகை செய்துவிடும்படியே நாடுகிறார்கள்!!" (கலாத்தியர் 5:17-Living Bible).
இன்று பரிசுத்தாவியின் ஊழியத்தைக் குறித்து அநேக கிறிஸ்தவர்கள் குழம்பிப்போயிருக்கும் தருணத்தில், நாமோ அவர் நம் மாம்சத்தின் கிரியைகளை, அதாவது நம் சுய வாழ்க்கையை நாம் மரணத்துக்கு கொண்டுவரும்படி "நமக்கு உதவி செய்யும் ஓர் ஒப்பற்ற உதவியாளர்" என தெளிவு பெறுவது சாலச் சிறந்ததல்லவா! ஆம், பரிசுத்தாவியானவர் இன்றும் அநேக காரியங்களை நமக்குள்ளும் நம் மூலமாயும் கிரியை நடப்பிக்கிறார். அவர் நடப்பிக்கும் கிரியை யாதொன்றையாயினும் நாம் அற்பமாய் எண்ணாதிருக்கக்கடவோம். ஆகிலும், பரிசுத்தாவியானவர் நம் சுய-வாழ்க்கையை மரணத்துக்குள் கொண்டுவரும்படி கிரியை செய்திட நாம் அவருக்கு இடம் தராத பட்சத்தில், நம்முடைய மற்ற எல்லா அனுபவங்களும் எந்த மதிப்பும் இல்லாத அனுபவங்களாகவே மாறிவிடும்!!
இதைத்தான் வேதாகமம் குறிப்பிட்டு "நீங்கள் மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். (இவ்வழி நடந்து) எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
(ரோமர் 8:13,14) என ஆணித்தரமாய் கூறுகிறது.
ஜெபம்:
பரலோக தந்தையே! எம் சுய வாழ்வை அழித்து விடும்படி அருளப்பட்ட பரிசுத்த ஆவிக்கு நாள்தோறும் எங்களை ஒப்புவித்து வாழ தயைபுரிந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments