இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 26
🔸️ நம்மில் தேவன் விரும்பும் அந்தரங்க சாட்சி வாழ்க்கை! 🔸️
ஈசாக்கை பலியாக கொடுக்கும்படி தேவன் ஆபிரகாமிடம் இரவில் பேசியபோது (ஆதி.22:1), அவன் ஏற்கனவே மக்கள் மத்தியில் தேவ மனுஷன் என்று பெயர் பெற்றிருந்தான் (ஆதி.21;22). நம்மைக்குறித்து மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தேவன் பொருட்படுத்துவதே இல்லை. தானே ஆபிரகாமை சோதித்தறிய விரும்பினார். ஆகையால்தான், ஒருவரும் கேளாவண்ணம் இரவில் அமைதியாக தேவன் ஆபிரகாமிடம் பேசினார்!
தேவன் ஆபிரகாமிடம் 'கேட்டது' விலையேறப்பெற்ற பொருள்! மறுநாள், அவன் அதைக்குறித்து ஒன்றும் செய்யாமல், தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனால், அதை ஒருவரும் அறிய வாய்ப்பில்லை. ஆபிரகாம் தனக்கு பயப்படுகிறானா இல்லையா என தேவன் பரீட்சிக்க விரும்பியது இப்படித்தான்!
தேவன் 'நம்மை' சோதித்தறிவதும் இப்படித்தான். அவர் நம்மிடம் பேசும்போது, மிக அமைதியாக, நம்மோடு வசிப்பவரும்கூட தேவன் நம்மிடம் என்ன சொன்னார் என்று அறியாவண்ணம் நமது இருதயத்தில் பேசுகிறார்! தேவன் நம் ஒவ்வொருவருக்கும் முற்றிலும் அந்தரங்கமான பகுதியாக 'நமது சிந்தை வாழ்வை' கொடுத்ததற்கு ஒரு காரணம், நாம் அவருக்கு பயப்படுகிறோமா? இல்லையா? என்று சோதித்தறியவே ஆகும். நமது சிந்தை, நமது வார்த்தையைப் போலவே உரத்த சத்தமுள்ளதாயிருந்தால், நம்மை ஒருவரும் அற்பமாய் எண்ணி விடாதபடி நாம் எல்லோரும் நமது சிந்தையை சுத்தமாகக் காத்துக் கொள்வோம். ஆனால், நமது சிந்தை மிக இரகசியமானதாக தேவன் மட்டும் காணக்கூடியதாக இருக்கிறபடியால், அவருக்கு பயப்படுகிறோமா? இல்லையா? என இப்போது தேவன் காண்பது எளிது.
ஆபிரகாம் சோதனையில் வெற்றி பெற்றான்! அவன் மனுஷருக்கு முன்பாக உள்ள அற்பமான சாட்சியைத் தேடவில்லை. அவன் தேவனுக்குரிய அந்தரங்கமான பகுதியிலும் கீழ்ப்படிய விரும்பினான். ஆம், அவன் ஈசாக்கை மறுநாள் காலையில் அழைத்துக்கொண்டு மோரியா மலைக்குப் பயணமானான்! அங்கு தனது ஏக சுதனை அர்ப்பணித்ததன் மூலம் "கர்த்தாவே நான் பூமியில் மற்ற யாரொருவரைக் காட்டிலும் உம்மையே அதிகமாய் நேசிக்கிறேன்" என்று சொன்னான். 'அப்போதுதான்' தேவன் தன் நற்சான்றிதழை அளித்து அவனை அளவில்லாமல் ஆசீர்வதிப்பதாக வாக்குப் பண்ணினார்!
ஜெபம்:
பரம தந்தையே! எங்கள் சிந்தையும், எங்கள் இருதயமும் யாரும் காண முடியா அந்தரங்கமாய் உள்ளதே! நீர் மாத்திரமே காணும் இந்த உன்னதமான அந்தரங்கத்தில் உமக்குப் பிரியமாய் வாழ அனுக்கிரகம் புரிந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments