Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 29

 இன்று "அவருடைய" சத்தம்


பிப்ரவரி 29


🔸️ மனுஷர் முன்பாக அல்ல, தேவனுக்காக வாழ்ந்திடுங்கள்! 🔸️


நீங்கள் ஏராளமான நற்கிரியைகளைச் செய்துவிட்டால், மனுஷருடைய பார்வையில் நீங்கள் அளவற்ற புகழைப் பெற்றுவிடுவீர்கள். இவ்வாறு நீங்கள் பெற்ற ஏராளமான மனுஷர் புகழும் நீதிகள் யாவும் 'அதிக அளவாகத்' தோன்றும் மரம், புல், வைக்கோல் போலவே இருக்கும் என 1கொரி. 3:12 கூறுகிறது. தேவனைப் பொறுத்தவரையில் நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள்? அல்லது நீங்கள் எத்தனை மணி நேரங்கள் ஜெபித்தீர்கள்? என்பது அவ்வளவு முக்கியமான கேள்வி இல்லை! மாறாக, தேவனுடைய மகிமைக்காகவே கொடுத்தீர்களா? அல்லது ஜெபித்தீர்களா? அல்லது உங்கள் மகிமையைத் தேடுவதற்காக அவைகளைச் செய்தீர்களா? என்பதே முக்கியமான கேள்விகள் ஆகும். பவுல் 1கொரி. 10:31-ல் கூறுகிறபடி, நாம் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்றே செய்திட வேண்டும் என்பதே நம்மைக் குறித்து இயேசுவின் இன்றைய எதிர்பார்ப்பாகும்!   


இவ்வாறு, புசிப்பது குடிப்பது முதற்கொண்டு நம் அன்றாட ஜீவியத்தின் ஒவ்வொரு சாதாரண நிகழ்ச்சிகளும் தேவனுடைய மகிமைக்காகவே செய்யப்பட வேண்டும்!


பழைய ஏற்பாட்டில் மார்க்க சம்பந்தமான கிரியைகள் யாவும் ஏழாம் நாளாகிய ஓய்வுநாள் அன்றே செய்யப்பட்டது. தங்களின் மற்ற சொந்த அலுவல்களை ஜனங்கள் அந்த வாரத்தின் 6 நாட்களும் செய்தார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டிலோ பரிசுத்த ஓய்வுநாள் என்றும், சாதாரண நாட்கள் என்றும் வித்தியாசம் இல்லாமல் சகல நாட்களும் பரிசுத்த நாட்களாகவே கருதப்படுகின்றன!


இப்போது, புதிய ஏற்பாட்டில் நாம் எதைச் செய்தாலும் அவைகளை தேவனுடைய நாம மகிமைக்காகவே செய்திடவேண்டும். இதற்கு இயேசுவே நமக்கு நல்ல மாதிரியாகத் திகழ்கிறார்! அவர் நாசரேத் ஊரில் வாழ்ந்த 30 ஆண்டு ஜீவியத்திலும் மார்க்க சம்பந்தமான ஊழியம் எதுவும் செய்யவே இல்லை. ஆம், நாற்காலிகளையும், மேஜைகளையும் தன் தச்சுக் கூடத்தில் செய்தே தேவனை மகிமைப்படுத்தினார்!! பூமிக்குரிய தன் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து, தேவனை மகிமைப்படுத்தினார்!! இவ்வாறாகத்தான், இயேசுவைப் பின்பற்றும் ஜீவியத்தின் மெய்யான அர்த்தத்தை நாம் விளங்கிக் கொள்கிறோம்!!   


ஜெபம்:

அன்பின் பரம பிதாவே! இன்றிலிருந்து, 'மனுஷர் காண' வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பி, உமக்காக வாழ உம்மண்டை வருகிறோம்! இரட்சகர் இயேசுவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments