இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 21
🔸️ நெஞ்சில் நேர்மை வேண்டும்! 🔸️
சத்திய வேதம் 1யோவான் 1:7 நாம் ஒளியில் நடக்காவிட்டால் தேவனோடு ஐக்கியம் கொள்ள முடியாது என ஆணித்தரமாகக் கூறுகிறது. நாம் ஒவ்வொருவரும் ஒளியில் நடந்துவிட்டால் நாம் நிச்சயமாக எதையும் மறைத்து வைத்திட முடியாது. ஏனெனில் ஒளியானது சகலத்தையும் வெளியரங்கத்திற்குக் கொண்டுவந்துவிடும். தன் ஜீவியத்தில் மறைத்து வைக்கும்படியானவைகள் உள்ளவன் மாத்திரமே இருளில் நடப்பான்.
நம்முடைய ஜீவியம் ஒரு திறந்த புத்தகத்தைப் போலிருக்க வேண்டும்! அவ்வாறிருக்கும்போது மாத்திரமே, நம் தனிப்பட்ட ஜீவியத்தையும், நம் வரவு-செலவு கணக்குப் புத்தகத்தையும், மற்ற வேறு எதையும் வந்து சோதிக்கும்படி நாம் பிறரை அழைத்திட முடியும். நாம் ஒன்றையும் மறைத்திட விரும்பவே மாட்டோம். இதற்குப் பொருள், நாம் பூரணராகிவிட்டோம் என்பதல்ல. மாறாக, இதற்குப் பொருள் நாம் நேர்மையாக நடந்து கொள்கிறோம் என்பதுதான்.
நாம் தேவனுக்கு முன்பாக எவ்விதம் காணப்படுகிறோமா அதுவே நம்முடைய உண்மையான ஆவிக்குரிய மதிப்பு என்பதையும், இதைத்தவிர வேறு எதுவும் செல்லுபடியாகாது என்பதையும், நாம் யாவரும் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். நமக்கு எவ்வளவு வேதஅறிவு உள்ளது? நாம் எவ்வளவு நேரம் ஜெபிக்கிறோம்? எத்தனை ஆவிக்குரிய கூட்டங்களுக்கு செல்கிறோம்? நம்முடைய மூப்பர்கள் மற்றும் சபையில் உள்ளவர்கள் நம்மைக் குறித்து என்ன எண்ணுகிறார்கள்? என்பதை வைத்து நம் ஆவிக்குரிய நிலையை நாம் கணக்கிடவே முடியாது. இதற்கு மாறாக, "என் ஜீவியத்தின் ஒவ்வொரு எல்லை பகுதியையும் உற்றுப்பார்க்கிற தேவன் என்னை குறித்து என்ன எண்ணுகிறார்?" என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள். இக்கேள்விக்கு நீங்கள் பெறும் பதில் மாத்திரமே உங்கள் உண்மையான ஆவிக்குரிய நிலையை நிர்ணயம் பண்ணும் அளவுகோலாகும். இவ்விதமாய் உங்களை நீங்களே கேட்டுக் கொள்வதும்.... அதற்கு நீங்கள் பதில் பெறுவதும், நாள்தோறும் தொடரட்டும்!
இயேசு நாத்தான்வேலைப் பார்த்து, "இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" (யோவான் 1:47) எனக் கூறிய வார்த்தைகள் என்னை கவர்ந்த மிக அருமையான வார்த்தைகளாகும். இதே பொன்னான வார்த்தைகளைக் கொண்டு இயேசு என்னையும் உங்களையும் வைத்து கூறிவிடுவார் என்றால் அது எத்தனை பெரிய நற்சான்றாய் இருக்கும்! இந்த அவரளிக்கும் நற்சான்றுக்கு வேறு எதுவுமே இணையாகிட முடியாது!!
ஜெபம்:
பரலோகப் பிதாவே! நேர்மையற்ற எங்கள் ஜீவியத்தை மன்னித்து, வெளிச்சத்தில் நடக்கும் கபடற்ற உத்தம வாழ்க்கையை எங்களுக்குத் தந்தருளும்! இயேசுவின் நாமத்தில், ஆமென்!
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments