Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 03

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 3


🔸️ நம்மை சீர்படுத்த இடைபடும் நல்ல தேவன்! 🔸️


யாக்கோபை தேவன் தன் திவ்விய சிட்சையினால் சிட்சித்தார். ஆம், தேவன் யாக்கோபிற்கென்று வைத்திருந்த உயர்ந்த பங்கை பெற்றுக்கொள்வதற்கு "திவ்விய சிட்சையே" தேவன் தெரிந்து கொண்ட வழியாயிருந்தது!!


இந்த திவ்விய சிட்சையின் ஆரம்பமாக, "யாக்கோபைப் போலவே சாமர்த்தியமான எத்தனாயிருந்த" லாபானை அவனருகில் தேவன் வைத்தார்! இந்த லாபான் யாக்கோபைப் போலவே ஓர் எத்தனாயிருந்தபடியால், அவர்கள் நெருங்கி சேர்ந்து வாழ்ந்த காலங்களில் "ஏராளமான உரசல்கள்" ஏற்பட்டு அதன் மூலமாய் யாக்கோபின் குணாதிசயத்தில் இருந்த கரடு முரடான பகுதிகள் வெகுவாய் பாதிக்கப்பட்டு 'சீராக' உரசப்பட்டுவிட்டன!


நம் வாழ்வின் கோணலான பகுதிகளை தூய்மையாக்கி செம்மைப்படுத்த யாரை நம் அருகில் வைத்திட வேண்டும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார்! இருப்பினும், அவரவருடைய தேவையை அறிந்து தன் சிட்சைகளை கவனமாய் கணக்கிட்டுத்தான் நமக்கு அனுப்புகிறார்! இவ்வாறு தேவனுடைய பாதுகாப்பின் பெட்டகத்திற்குள் அடங்கியிருக்கும் பட்சத்தில், எவ்வளவு மோசமான லாபானை நமதருகில் தேவன் வைத்தாலும் "சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கும்படியே" செய்திடுவார்! தங்களைப் போலவே 'கரடாண' குணாதிசயம் கொண்ட நபர்களை திருமணம் செய்யும்படி தேவன் நடத்தியதினிமித்தம் அநேக ஜனங்கள் "பரிசுத்தமாகுதலை" தங்கள் வாழ்வில் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆம், "இரும்பை இரும்பு கருக்கிடும்" (நீதி. 27:17) என்ற வசனத்தின்படி, தம்பதியினர் இருவரும் உரசலில் சீராகப்படுகிறார்கள்!!


இப்போது, நடந்ததென்ன? யாக்கோபு கடைசியாக தான் விதைத்ததை அறுக்கத் தொடங்கிவிட்டான்! இவன் முதலாவது தன் ஜீவகாலமெல்லாம் மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான்! இப்போது அவனே லாபானால் ஏமாற்றப்பட்டான்! மற்றவர்களுடைய வாழ்வில் இவன் லாவகமாய் போட்ட கசப்பு மாத்திரை இப்போது அவன் வாயிலேயே சுழன்று விழுந்து கசந்தது!!


யாதொரு நோக்கமும் இல்லாமல் தேவன் நம்மை ஒருபோதும் சிட்சிக்கமாட்டார். அவரவர்களுக்குத் தேவையான மருந்து எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். "தயவுள்ளவனுக்கு அவர் தயவுள்ளவராகவும், மாறுபாடுள்ளவனுக்கு அவர் மாறுபடுகிறவராகவும்...." (சங்.18:25,26), 'ஒவ்வொரு யாக்கோபையும்' கையாள வேண்டிய விதத்தை தேவன் அறிந்திருக்கிறார்! 


ஜெபம்:

பரம சற்குருவே! நாங்கள் வாழ்வில் சீர்திருந்த வேண்டிய பகுதிகளை நன்கு அறிந்து, எங்களோடு இடைபடும் உம் செயல்களுக்கு நன்றி! உமக்கு இணங்கி, நற்சீர் பெற்றிட அனுக்கிரகம் செய்யும்! கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments