இது ஒரு அருமையான கதை - இது உங்களை ஊக்குவிப்பதாக இருந்தால், பிறருக்கும் அனுப்பலாம். இல்லையென்றால், தக்க வைத்துக் கொள்ளுங்கள்; இந்த கதை பின்வரும் நாட்களில் உங்களை ஊக்குவிக்கலாம்....
கதை:
ஒரு வயதான விவசாயி
தனது இளய பேரனுடன் மலைப்பகுதியில் இருந்த பண்ணை ஒன்றில் வசித்து வந்தார்.
தினமும் அதிகாலையில் அந்த முதியவர் சமையலறை மேஜையில் அமர்ந்து வேதாகமத்தை படித்துக் கொண்டிருப்பார். அவரது பேரன் அவரைப் போலவே இருக்க விரும்பி, அவனால் இயன்ற எல்லா வழிகளிலும் அவரைப் பின்பற்ற முயற்சி செய்தான்.
ஒரு நாள் பேரன், "தாத்தா! உங்களைப் போலவே நானும் வேதாகமத்தை படிக்க முயற்சிக்கிறேன், ஆனால் எனக்கு அது புரியவில்லை, எனக்குப் புரிந்தவைகளும் புத்தகத்தை மூடியவுடன் மறந்துவிடுகிறேன். வேதாகமத்தை படிப்பதால் நமக்கு என்ன பயன்?" என்று கேட்டான்.
முதியவர் அடுப்பில் நிலக்கரியை போடுவதைவிட்டு அமைதியாகத் திரும்பி,
"இந்த நிலக்கரி கூடையை ஆற்றிற்கு கொண்டுபோய் கூடை நிறைய தண்ணீர் கொண்டு வா" என்று பதிலளித்தார்.
சிறுவன் தாத்தா சொன்னபடி செய்தான்; ஆனால் அவன் வீட்டிற்குத் திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் வெளியேறிவிட்டது. முதியவர் சிரித்துக்கொண்டே, "அடுத்த முறை நீ கொஞ்சம் வேகமாக செல்ல வேண்டும்" என்று கூறி, மீண்டும் முயற்சி செய்ய கூடையுடன் ஆற்றுக்கு அனுப்பினார். இந்த முறை சிறுவன் வேகமாக ஓடினான்; ஆனால் அவன் வீடு திரும்புவதற்குள் மீண்டும் கூடை காலியாகவிட்டது. மூச்சுத் திணறலுடன் தாத்தாவிடம், "கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமில்லை" என்று கூறிவிட்டு, அதற்கு பதிலாக வாளி எடுக்கச் சென்றான்.
முதியவர், "எனக்கு ஒரு வாளி தண்ணீர் வேண்டாம்; எனக்கு ஒரு கூடை தண்ணீர்தான் வேண்டும். நீ இன்னும் கடினமாக முயற்சிக்கவில்லை," என்று கூறிவிட்டு, சிறுவன் மீண்டும் முயற்சிப்பதைப் பார்க்க, கதவை திறந்தபடி வெளியே வந்தார்.
'கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமற்றது' என்று சிறுவனுக்கு இப்போது புரிந்து விட்டது. ஆனாலும், தன்னால் முடிந்தவரை எவ்வளவு வேகமாக ஓடினாலும், தான் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, தண்ணீர் முழுவதுமாக வெளியேறிவிடுகிறது' என்று தனது தாத்தாவிடம் காட்ட விரும்பினான்.
சிறுவன் மீண்டும் கூடையில் ஆற்று நீரை எடுத்துக்கொண்டு இன்னும் மிக வேகமாக ஓடினான். ஆனால், அவன் தாத்தாவிடம் வந்தபோது கூடை மீண்டும் காலியாக இருந்தது. மூச்சிரைக்க, "தாத்தா பாருங்கள் இதனால் பயனில்லை!" என்றான்.
முதியவர் "அப்படியானால் அது பயனற்றது என்று நினைக்கிறாயா?" “கூடையைப் பார்” என்றார். சிறுவன் கூடையைப் பார்த்தான். கூடை வித்தியாசமாக இருப்பதை முதன்முறையாக உணர்ந்தான். ஒரு அழுக்கான பழையதாய் இருந்த நிலக்கரி கூடை மாற்றப்பட்டு, இப்போது உள்ளேயும் வெளியேயும் அது சுத்தமாக இருந்தது.
"மகனே, நீ வேதாகமத்தை முதல் முறையாக படிக்கும்போது இதுதான் நடக்கும். உனக்கு எல்லாமே புரியாமல் இருக்கலாம் அல்லது நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போகலாம், ஆனால் அதை தினமும் தியானிக்கும்போது, உன்னுடைய உள்ளும் புறமும் மறுரூபமாகும். இதுவே நம் வாழ்வில் இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் ஈவு."
🍁 தேவனுக்கே மகிமை 🍁
எழுதியவர்: தெரியாது
----------------------------------------------------
From:- https://t.me/slaveofchrist
0 Comments