இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 8
🔸️ 'பரிசுத்தாவியே' நாம் பெற்றிட வேண்டிய பிரதான பரிசு! 🔸️
பரிசுப் பொருளை சுற்றிவரும் கலர் பேப்பர்களை (உணர்ச்சிமயமான எழுச்சிகளை) "பரிசாக" நாம் எண்ணிவிடக்கூடாது. உயிர்த்தெழுந்த ஆண்டவர், தன் சபைக்கு அருளிய "பரிசாய்" இருப்பது பரிசுத்த ஆவியானவரே ஆவார். அவர் ஜனங்களின் மீது வரும்போது 'அல்லேலூயாவின் ஆர்ப்பரிப்போடோ', எழுச்சி கொண்ட 'மகிழ்ச்சியின் கண்ணீரோடோ' அல்லது 'அந்நிய பாஷையின் வரத்தோடோ' அல்லது எந்த எழுச்சியும் இல்லாமல் 'மெதுவான சப்தத்தோடோ' வரக்கூடும்! ஒவ்வொருவரிடத்திலும் உள்ள இயற்கையான சுபாவங்கள் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இன்றைய அநேக கிறிஸ்தவர்களைப்போல் வித்தியாசமான - மற்றவர்களோடு இணக்கம் இல்லாதவர்களாய் இல்லாமல், பரிசுத்த ஆவியானவரோ அவரவருடைய சுபாவங்களுக்கு ஏற்ப இணைந்து சென்றிட மனதுள்ளவராகவே இருக்கிறார்.
எனவே பரிசுத்தாவியின் வரத்தை, நான் பெற்றுக்கொண்ட "பரிசுப் பேப்பரின் கலர் போலவே" மற்றவர்களும் பெற்றிருக்க வேண்டுமென எண்ணுவது நமது மதியீனமே ஆகும். பரிசை சுற்றிவந்த மினுமினுப்பான கலர் தாள்களில் சிறு பிள்ளைகள்தான் எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். முதிர்ச்சி அடைந்தவர்கள் மாத்திரமே, பரிசை சுற்றி வந்த அட்டையைவிட "பரிசுதான்" முக்கியமானது என்பதை அறிந்திருப்பார்கள்! (அப். 1:8).
அப்போஸ்தலனாகிய பவுல், இயேசுவை தரிசனமாய்க் கண்டு மனந்திரும்பியவரேயாவார். இருப்பினும், அவர் ஒரு பிரசங்கத்தில்கூட 'இரட்சிக்கப்படுவதற்கு' தான் பெற்ற தரிசனத்தையே எல்லோரும் பெற்றிருக்க வேண்டுமென பிரசங்கிக்கவில்லை!!
பரிசு எந்தக் கலர் பேப்பரில் சுற்றி வந்தாலும், அதற்குள்ளே இருக்கும் பொருள்தான் முக்கியம் என்பதை அவர் அறிந்திருந்தார். அதுபோலவேதான், பரிசுத்தாவியின் நிறைவும் இருக்கிறது.
ஜெபம்:
பரலோகப் பிதாவே! அனுபவங்களை சார்ந்திடும் இந்த நாட்களில், மெய்யான உமது பரிசை "பரிசுத்தாவியின் வல்லமையை" அதிக நிச்சயத்தோடு நாங்கள் பெற்றிருக்க உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments