Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 14

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 14


🔸️ நம் தோல்விகளிலும் நம்மைவிட்டு விலகாத ஆண்டவர்! 🔸️


ஆண்டவர் நம்மைவிட்டு ஒருபோதும் விலகவும் மாட்டார்; நம்மை கைவிடவும் மாட்டார்! நாம் சறுக்கி... விழுந்துவிட்டாலும்கூட, அவர் நம்மைவிட்டு விலகவே மாட்டார்! நம் தோல்விகளைக் குறித்து அவரிடம் நேர்மையாய் நடந்துகொள்ள மாத்திரமே அவர் விரும்புகிறார். அவ்வித நேர்மையில் 'இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு' அவர் எப்போதும் சமீபமாகவே இருக்கிறார்!! 


நாம் விழுந்துவிட்டாலும், கர்த்தர் தம் கரத்தினால் நம்மைத் தாங்கிக் கொள்கிறபடியினால், நாம் தள்ளுண்டு போவதில்லை என்பதே சங்கீதம் 37:24 நமக்குத் தரும் வாக்குத்தத்தமாகும். மற்றவர்கள் நமக்குச் செய்யும் தீமைகளும், நம்முடைய நன்மைக்கு ஏதுவாகவே ஆண்டவர் நடத்துவார் என்பது மாத்திரமல்லாமல்.... நம் தோல்விகளும் நம்முடைய நன்மைக்கு ஏதுவாகவே கிரியை செய்திடச் செய்வார்!


எத்தனை தீமைகளாய் இருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றிலிருந்தும் நம்மை விடுவித்து வெற்றி வாகை சூடும்படி செய்வார்! அவர் நம்மை வழுவாதபடி காத்துக்கொண்டு, ஒருநாளில் பிதாவிற்கு முன்பாக நம்மை மாசற்றவர்களாய் நிறுத்துவார்! இவ்வாறு, முடிவுபரியந்தமும் நம்மை காக்க வல்ல "அவருடைய வல்லமையில்" நம்முடைய நம்பிக்கை இருக்கிறதேயல்லாமல், நம்முடைய சொந்த பெலனில் இல்லவே இல்லை. ஆகவேதான், நமக்கு முன்னிருக்கும் எதிர்காலத்தை மிகுந்த தைரியத்தோடும், மிகுந்த நம்பிக்கையோடும் நாம் எதிர்கொண்டு முன்னேறுகிறோம்.


ஆகவே, வேறு எவைகளையெல்லாமோ காண்பதிலிருந்து நம் கண்களைத் திருப்பி, இயேசுவை மாத்திரமே நோக்கிப்பார்த்து நம் ஓட்டத்தை நாம் ஓடக்கடவோம். 'இப்போது' நம்மைச் சுற்றி நெருக்கியிருக்கும் பெலவீனங்களையோ அல்லது நம் கடந்தகால தோல்விகளையோ இனி ஒருபோதும் நோக்காது இருப்போமாக! "நமக்குள் ஒரு நன்மையும் வாசமாய் இருக்கவில்லை!" என ஏற்றுக்கொள்வதுதான் மெய்யான தாழ்மை! (ரோமர் 7:18). அவ்வாறு, உங்களுக்குள் ஒரு நன்மையும் வாசமாய் இல்லை என்றால், பின் ஏன் நீங்கள் உங்களுக்குள் இருப்பதையே கண்டுகொண்டு இருக்கிறீர்கள்?!!  


அதேபோல், உங்கள் கடந்தகாலத் தோல்விகளை நோக்கிப் பார்ப்பதையும் நிறுத்துங்கள்! அப்படியெல்லாம் நீங்கள் நோக்கிப் பார்ப்பது உங்களுக்கு அதைரியத்தையே கொண்டுவரும்!


ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! எந்த தோல்வியிலும் துவண்டு போகாதபடி, எங்களோடு இருந்து தூக்கிவிடும் உமது அன்பிற்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments