Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஆகஸ்ட் 23

 இன்று "அவருடைய" சத்தம்


ஆகஸ்ட் 23


🔸️ தெய்வீக அன்பே மெய்யான ஆவிக்குரிய வளர்ச்சி! 🔸️


எல்லா ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் பிரதானமான ஒரே ஆதாரம் "அகாபே-அன்பில்" (தெய்வீக சுபாவ அன்பில்) வளர்ந்திடும் வளர்ச்சிதான்! அதுபோல், எல்லா ஆவிக்குரிய வளர்ச்சியற்ற தன்மைக்கும் பிரதான காரணம், "அன்பில் முதிர்ச்சி இல்லாதிருப்பதே" ஆகும்!! எனவே, எல்லா ஆவிக்குரிய தோல்விக்கும் பிரதான காரணம், "அன்பிலே ஏற்படும் வீழ்ச்சியே" ஆகும். நம்மில் அன்பில்லையென்றால், நாம் சீரழிந்து போவதும் நிச்சயம்!


"அகாபே-அன்பில்" தோன்றி "அகாபே-அன்பில்" செயல்படாத எவ்வித சிந்தையும், வார்த்தையும், திட்டமும், நோக்கமும் அல்லது எவ்வித கிரியைகளும் ஒரு நாளில் முழுவதுமாய் அழிந்துபோய்விடும்! அதாவது, அன்பில்லாத எந்த கிரியைகளும் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும்!!


"அகாபே-அன்பு" ஜெயிக்க முடியாத எந்த பிரச்சனையும் இல்லை!


"அகாபே-அன்பு" சுகமாக்க முடியாத எந்த ஆத்ம நோயும் இல்லை!


"அகாபே-அன்பு" திறக்கக்கூடாத எந்த கதவும் இல்லை!


"அகாபே-அன்பு" பாலம் அமைக்க முடியாத எந்த பிளவும் இல்லை!


"அகாபே-அன்பு" உடைத்திட முடியாத எந்த தடைச்சுவரும் இல்லை!


"அகாபே-அன்பு" மீட்டிட முடியாத எந்தப் பாவியும் இல்லை!


ஆம், நீங்கள் மாத்திரம் இந்த "அகாபே-அன்பினால்" நேசிக்கக் கற்றுக்கொண்டால் போதும், இவ்வுலகில் சொல்லிமுடியாத மகிழ்ச்சியும், வலிமை கொண்டவர்களாயும் மாறுவீர்கள் என்பது திண்ணம்!


'கர்த்தருடைய மேஜைக்கு வந்து, அவருடைய சரீரம் இன்னதென்று உணர்ந்து கொள்ளாமல் புசிப்பவர்கள் அவருடைய சரீரத்தைக் குறித்தும், இரத்தத்தைக் குறித்தும் குற்றம் உள்ளவர்களாக இருப்பார்கள்' என பவுல் கூறினார். அதாவது, இன்று பூமியிலிருக்கும் கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள அன்பின் ஐக்கியத்தைப் பாதுகாக்கத் தவறியவர்கள், மீண்டுமாய் தங்கள் இரட்சகரை சிலுவையில் காயப்படுத்திய குற்றத்திற்கு ஆளாகிறார்கள் என்றே சூசகமாக குறிப்பிட்டார்!


ஒன்றாய் ஐக்கியப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள், அன்று சிலுவையில் தொங்கிய ஆண்டவரின் சரீரத்தில் ஏற்பட்ட "அதே வலியைத்தான்" இன்று மீண்டும் அவருக்குத் தருகிறார்கள் என பவுல் கூறினார்!!


ஜெபம்:

எங்கள் அன்பின் பிதாவே! தெய்வீக அன்பிலிருந்து நாங்கள் குளிர்ந்து போகாமல், நாளுக்குநாள் அன்பில் வளர்ந்து, விசால இதயத்துடன் அனைவரையும் நேசித்திட கிருபை அருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments