Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

செப்டம்பர் 01

 இன்று "அவருடைய" சத்தம்


செப்டம்பர் 1


🔸️ நிபந்தனையற்ற தெய்வ அன்பு வேண்டும்! 🔸️


ஆண்டவராகிய இயேசு கூறுகையில், "உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால் உங்களுக்குப் பலன் என்ன?" எனக் கேட்டார் (மத்தேயு 5:46). சபையில் நம்மை நன்றாய் நேசிக்கின்ற சகோதர சகோதரிகளின்மீது அன்பு பாராட்டுகிறோம். அவர்களும் பதிலுக்கு நம்மை அன்புகூருகிறார்கள். ஆனால், அவ்வித அன்புகூருதலுக்கு 46-ம் வசனத்தின்படி "நமக்கு பலன் ஏதும் இல்லை" என்றே இயேசு அறிவிக்கிறார். ஏனென்றால், ஆயக்காரரும் இவ்வுலக அஞ்ஞான மக்களும் அப்படிச் செய்கிறார்களே என இயேசு கூறினார். எனவே நம்மை நேசிப்பவர்களை மாத்திரமே நாம் நேசித்தால் அஞ்ஞானிகளைக்காட்டிலும் நாம் ஒன்றும் மேலானவர்கள் அல்ல!  


அஞ்ஞானிகள் மாத்திரமல்ல, தேவனற்றவர்களும், கம்யூனிசவாதிகளும் தேவன் இல்லை என்று சொல்பவர்களும்கூட தங்களை நேசிப்பவர்களை ஒருவரையொருவர் தாங்களும் அன்புகூர்ந்து நேசிக்கிறார்கள். ஆனால் ஒருவர் நம்மை அன்புகூராவிட்டாலும் அவரை அன்புகூர்ந்தோம் என்றால், நாமே இயேசுகிறிஸ்துவின் மெய்யான சீடர்களாய் இருப்போம்!! இதன் அடிப்படையில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சோதித்தறிய கீழ்காணும் கேள்விகளை வைத்து உங்களையே நீங்கள் கேட்டுப்பாருங்கள்:

1) என்னை வெறுத்தவர்களில் எத்தனை பேரை நான் அன்புகூர்ந்தேன்?


2) என்னைத் துன்புறுத்தியவர்களில் எத்தனை பேருக்காக நான் ஜெபித்தேன்?


 3) எனக்குத் தீமை செய்தவர்களில் எத்தனை பேருக்கு நான் நன்மை செய்தேன்?


பார்த்தீர்களா, மனுஷீக அன்பிற்கும், தெய்வீக அன்பிற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மனுஷீக அன்பு தனக்கு நன்மை செய்தவர்களை எளிதாக அன்புகூர்ந்துவிடும். ஆனால், உங்களுக்கு ஒருவர் நன்மை செய்யாதது மாத்திரமல்ல, உங்களுக்குள்ளதைத் திருடிக்கொள்ளும்போதும்...உங்கள் உரிமைகளையும், உங்கள் கௌரவங்களையும் பறித்துக் கொள்ளும்போதும் உங்கள் நிலை என்ன? இதுபோன்ற இடத்தில்தான் உங்களிடம் தெய்வீக அன்பு இருக்கிறதா? இல்லையா? என்பது சோதிக்கப்படுகிறது. இந்த இடத்தில்தான் உங்கள் நீதி பரிசேயர்களின் நீதியைக்காட்டிலும் மேலானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நீங்களோ அல்லது நானோ ஒருக்காலும் பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இந்த உண்மையை ஆண்டவராகிய இயேசு மிகத் தெளிவாகத் தன் சீடர்களுக்கு எடுத்துரைத்தார்!   


ஜெபம்:

எங்கள் பரம தந்தையே! மாறிவிடும் மனுஷீக அன்பு அல்ல, என்றென்றும் மாறாத தெய்வ அன்பால் ஒவ்வொருவரையும் நேசித்திட தயை புரிந்தருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:- https://t.me/hisvoicetoday

‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧

Google Drive • Ebook • Download Now:


https://drive.google.com/folderview?id=19Jovj4_rjWgGPPs49g4GNX8GIP6756rA




Post a Comment

0 Comments