இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 3
🔸️ பாவிகளை நேசிக்கும் நல்ல இருதயம் வேண்டும்! 🔸️
பொதுவாய், பாவம் நிறைந்த ஜனங்கள் அதிக பரிசுத்தம் கொண்ட ஜனங்களோடு இருப்பதைக் காட்டிலும் குறைவான பரிசுத்தம் கொண்ட ஜனங்களோடு இருப்பதையே தங்களுக்கு சௌகரியமாய் கருதுவார்கள். ஆகவே இயேசுவின் நாட்களில் இருந்த பாவிகள், பூரணரான இயேசுவோடு இருப்பதைக் காட்டிலும் பூரணமற்ற பரிசேயர்களோடு இருப்பதையே அதிக சௌகரியமாய் எண்ணியிருக்க வேண்டும். ஆனால், காரியம் அப்படி சம்பவிக்கவில்லையே! ஏனெனில் பரிசேயர்கள் அல்ல, இயேசுவே "பாவிகளின் நண்பன்" என்ற புகழாரத்தைப் பெற்றார்!! இது எப்படி சம்பவித்தது? எப்படியெனில், பரிசேயர்கள் வெறும் எலும்புக்கூடுகளாய் மாத்திரமே இருந்தனர்.
எலும்புக்கூடு ஒரு மனுஷனை நோக்கி நடந்து வந்தால், அந்த மனுஷன் அலறியடித்து ஓடுவதைப் போலவே பாவிகளும் பரிசேயர்களை விட்டு ஓடினர்!! ஆனால் அவர்களோ இயேசுவைச் சூழ்ந்து கொண்டார்கள்!!ஏனெனில் இயேசு எவ்வளவுதான் பூரணப் பரிசுத்தம் நிறைந்தவராய் இருந்தாலும், அதைவிட வெளிப்படையாய் அவரிடத்தில் மனதுருக்கமும் பூரணமாய் நிறைந்து இருந்ததை அவர்கள் கண்டார்கள்!! (லூக்கா 6:36).
இந்த உலகில் வாழும் பாவிகளான ஜனங்கள் கிறிஸ்துவிடம் வரமுடியாமல் விரட்டப்படுவதற்கு சுயநீதி கொண்ட கிறிஸ்தவர்களும், "உங்களைக் காட்டிலும் நாங்கள் பரிசுத்தவான்கள்" என்ற பரிசேய எண்ணம் கொண்ட சபைகளுமே காரணமாகும்.
அவர்களுக்குள் நன்மை வாசம் செய்திருக்கும் என்றால், அநேகம் பாவிகளை அவர்கள் கிறிஸ்துவண்டை ஈர்த்து இருப்பார்களே! நன்மையினால் நிறைந்திராமல், நீதியை மாத்திரம் பின்பற்றுவோரிடம், இழந்துபோன பாவிகளின் மீது உண்டாகும் மனதுருக்கம் ஒருபோதும் இருப்பதில்லை! இதனால் பாவிகளைச் சந்திக்கும் சுவிசேஷ ஊழியத்திலும் அவர்களுக்கு நாட்டம் இருப்பதில்லை!!
பரிசுத்த வாழ்வு நிச்சயமாய் வேண்டும்! அதோடு சேர்த்து, மனதுருக்கமும் அன்பும் வேண்டும்! அதுவே மெய்யான திவ்வியமாகும்!!
ஜெபம்:
இரக்கமுள்ள பிதாவே! எல்லா பாவிகளையும் மனதார நேசிக்கும் நற்குணம் தாரும்! அவர்களை நாடிச் சென்று சுவிசேஷம் கூறும் வாஞ்சையும் தாரும்!!கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments