Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 19

 இன்று "அவருடைய" சத்தம்


அக்டோபர் 19


🔸️ முழுமையும் தேவனுக்கே வாழ்ந்திட வேண்டும்! 🔸️


"அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; நான் அவர்களை பரீட்சிக்க வேண்டும்" (நியாயாதிபதிகள் 7:4) என தேவன் கிதியோனுக்கு கட்டளையிட்டார். அந்த பதினாயிரம் பேரும் தண்ணீரண்டைக்கு வந்தபோது, அவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய சத்துருவைக் குறித்த யாதொரு எண்ணமும் அற்றவர்களாய் "குனிந்து, தண்ணீருக்குள் தலையை பதித்து, சுவைத்து சுவைத்து குடித்தார்கள்!"


இன்றும் அனேக கிறிஸ்தவர்களுடைய நிலை இவ்வாறாகவே இருக்கிறது. உலகத்தின் கவர்ச்சிகளைக் கண்ட மாத்திரத்தில், தங்கள் ஆண்டவரையும் அவருக்குரிய யுத்தத்தையும் மறந்துவிட்டு.... பொருளாசைபிடித்து உலக செல்வத்தைத் தேடி... தங்கள் தலையை கவிழ்த்து, அதில் பதித்துக்கொள்கிறார்கள்! அன்றைய தினம், கிதியோனின் வீரர்களில் 9,700 பேர் தகுதியை இழந்து போனார்கள்!!


எஞ்சியிருந்தவர்கள் 300 பேர் மாத்திரமே! இந்த புருஷர்கள் மாத்திரமே, தண்ணீரண்டை வந்தபோதும், எதிராளியை தொடர்ந்து கண்காணித்தார்கள்.... அதே வேளையில், தங்கள் தாகத்திற்குத் தேவையான தண்ணீரை மாத்திரம் தங்கள் கைகளால் அள்ளி குடித்தார்கள்.  


உத்தம விசுவாசிகளாக சித்தரிக்கப்படும் இவர்கள், பணத்தையும் உலகப் பொருட்களையும் புழங்கினார்கள்; "ஆனால்" அவைகளால் ஆட்கொள்ளப்படவில்லை! தங்கள் வேலைகளில் உண்மையுள்ளவர்களாக இருந்து, தங்கள் ஜீவனத்துக்குரியவைகளைச் சம்பாதித்தார்கள். மீதியான தங்கள் நேரம் முழுவதையும் ஆண்டவருக்காக அவர்களால் என்ன செய்ய முடியுமோ அந்த ஊழியங்களைச் செய்தார்கள்!! "இத்தகைய ஜனங்களே எனக்குத் தேவை" என தேவன் உரைத்தார்.   


அன்றைய சேனையில் 300 பேர் மாத்திரமே நிலைத்திருந்தார்கள்! முதலில் திரண்டு வந்த 32000 பேரில் இவர்களின் விகிதம் 1% மாத்திரமே!! அன்றும், இன்றும் இந்த குறைவான சதவீதமே நிலைத்திருக்கிறது.... ஏனெனில், ஜீவனுக்குப் போகிற வழி இடுக்கமாயும், அதை கண்டுபிடிப்பவர்கள் வெகு சிலராயும் இருக்கிறார்கள்!!


வாக்குத்தத்த பூமிக்கு புறப்பட்டு வந்த ஆறு லட்சம் புருஷர்களில் யோசுவா, காலேப் ஆகிய இரண்டு புருஷர்கள் மாத்திரமே பிரவேசித்தார்கள்! ஆகிலும், முழு இருதயம் கொண்ட "இந்த சிலரில் மாத்திரமே" ஆண்டவர் இன்றும் பிரியமாயிருக்கிறார்!!


ஜெபம்:

எங்கள் பரம பிதாவே! உம்முடைய நோக்கத்தை தங்கள் வாழ்வில் நிறைவேற்றுபவர்கள், முழுமையும் உமக்குத் தந்தவர்கள்! உலகத்தின் 'தேவை' தவிர, முழுமையும் உமக்காய் வாழ அருள்புரியும்!  

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments