Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 25

 இன்று "அவருடைய" சத்தம்


அக்டோபர் 25


🔸️ குறையாத தெய்வ அன்பு வேண்டும்! 🔸️


"நேசம் மரணத்தைப் போல் வலிது!" (உன்னத. 8:6) என்றே வேதம் கூறுகிறது. அதாவது, மரணம் எந்த மனிதனையும் தப்பவிடாமல் யாவர் மீதும் வலிமையாய் சம்பவிப்பது போலவே, தெய்வ அன்பும் ஒருவர் பாக்கி இல்லாமல் மனுவர்க்கத்தின் எல்லோரையும் நேசிக்கிறது! இப்போதோ புதிய உடன்படிக்கையில் இயேசு மரணத்தையே ஜெயித்து விட்டார்! எனவே, இப்போது "திவ்ய அன்பே (நேசமே) மரணத்தைக் காட்டிலும் வலிது!! என நாம் கூறிட முடியும். 


இயேசுவின் இப்பூலோக வாழ்க்கையில் "சிலுவையின் வழியாய்" அவர் வெளிப்படுத்திய தேவ அன்பை, மானிடரின் எவ்வித கொடிய வெறுப்பும், கசப்பும், ஆவிக்குரிய மரணத்தைக் கொண்டுவரும் எவ்வித கொடிய பாவ விஷயமும், அந்த அன்பை மேற்கொள்ள முடியவில்லை! இருளில் உதித்த இத்தேவ அன்பின் வெளிச்சத்தை, இருளானது பற்றிக்கொள்ள முடியவில்லை! ஆம், மாம்சம் ஜெயிக்கப்பட்டது..... ஏனெனில், அது தொடர்ச்சியாய் சிலுவையில் அறையப்பட்டு விட்டது. இவ்வாறு மாம்சமும் அதின் ஆசை இச்சைகளும் தொடர்ச்சியாய் வெறுக்கப்பட்டு சிலுவையில் அறையப்படும்போதுதான், அந்த கடின திரை கிழிக்கப்படுகிறது. ஆம், இப்போது நாம் எல்லோரையும் திவ்ய அன்பினால் அன்புகூர்ந்துவிட முடியும்! 


இவ்வொப்பற்ற தெய்வ அன்பு தன்னில் குறைவுபடுவதைக் கண்டு, என்ன கிரையமானாலும் அந்த அன்பைப் பெறுவதற்கு கூக்குரலிட்டு கதறுபவனே, மாம்சத்தின் வழியாய் செல்லும் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தின் "சிலுவை உபதேச" வெளிப்பாட்டைப் பெறுவான்! 


இன்று அநேக விசுவாசிகள், குறிப்பாய் பரிசுத்தத்தைப் பிரசங்கிக்கும் பிரசங்கிகளிடம்கூட அவர்களின் அன்பு தங்கள் குழுவினருக்குள் மாத்திரமே வரையறுக்கப்பட்டதாய் இருக்கிறது. இவர்கள் தங்கள் சொந்த குழுவினரைப்பற்றி தீமையாகப் பேசாமல் இருக்கலாம். ஆனால் மற்ற விசுவாசிகளைப்பற்றி தீமையாய் பேசவோ, தீமையானவைகளைக் கேட்கவோ செய்கிறார்கள்! இந்நிலை உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிறதா? என்பதை சற்றே ஆராய்ந்து பாருங்கள். மரணமானது, யாரென்று பாராமல் யாவரையும் ஆட்கொள்வதுபோல், யாராயிருந்தாலும் நேசித்திடும் நேசமே, மரணத்தைக்காட்டிலும் மிக வலிது! அந்த அன்பையே நாம் நாடிடக் கடவோம்!!


ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! யார்மீது கொண்ட நேசத்திலும் நாங்கள் குறைந்து போகாதிருக்க, காரிருள் பகையையும் மேற்கொண்டு அன்புகூர்ந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments