Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 27

 "இன்று அவருடைய சத்தம்"


அக்டோபர் 27


🔸️ எதிர்கொள்ளும் சோதனையை ஜெயித்திட ஜெபம் தேவை! 🔸️


சோதனைக்கும், பாவத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். நாம் 'திடீரென்று' ஒன்றைப் பார்த்தினிமித்தம் சோதிக்கப்பட்டால், அது பாவமாகாது! ஆனால், நம்மைச் சோதித்த ஒன்றைத் தொடர்ச்சியாக பார்ப்போமென்றால் அல்லது அவைகளைச் சிந்தையில் வைத்து சிந்திப்போமென்றால்...... ஆ, இப்போது நீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள்!நாம் சோதிக்கப்படுவதை ஒருக்காலும் தவிர்க்கவே முடியாது. ஆனால் நம்மைச் சோதித்தவைகளிலிருந்து நம் கண்களையோ அல்லது நம் மனதையோ நிச்சயமாய் திருப்பிக் கொள்ளமுடியும்!! இவ்விதம் நம் சித்தத்தை நாம் எவ்விதம் அப்பியாசப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் நாம் பரிசுத்தமாகிறோமா அல்லது பாவத்தில் மூழ்குகிறோமா என்பதை நிர்ணயிக்க முடியும்.


நாம் சோதிக்கப்பட்டதற்காக நாம் குற்றவாளிகள் என தேவன் ஒருபோதும் நம்மைப் பிடிப்பதே இல்லை. ஆனால் நாம் சோதனைகளை எதிர்த்து நிற்க வேண்டுமென தேவன் திட்டவட்டமாக விரும்புகிறார்! ஒரு பரிசுத்தவான், "பறவைகள் என் தலைக்கு மேல் பறந்து செல்வதை நான் தடை செய்யவே முடியாது. ஆனால் அவைகள் என் தலையில் உட்கார்ந்து கூடுகட்டுவதை என்னால் நிச்சயமாய் தடை செய்ய முடியும்" எனக் கூறினார். ஆம், சோதனை உங்களிடத்தில் வருவதை நீங்கள் ஒருபோதும் தடை செய்யவே முடியாது. ஆனால், அந்த சோதனை உங்கள் மனதில் அமர்ந்து தங்கிவிடுவதை நீங்கள் நிச்சயமாய் தடை செய்திட முடியும்! 


கெத்சமெனே தோட்டத்தில் பேதுரு, யாக்கோபு, யோவானைப் பார்த்து, "நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்" என இயேசு கூறினார் (மத். 26:41). சீஷர்களை நோக்கி சோதனை நெருங்கி வந்ததை இயேசு அறிந்திருந்தார். எனவே, அந்த சோதனையை சந்திப்பதற்கு அவர்களை ஆயத்தம் செய்ய இயேசு விரும்பினார். ஆனால் அவர்களோ ஜெபிப்பதற்கு பதிலாக நித்திரை பண்ணினார்கள். அதன் விளைவாக, சோதனை வந்தவுடன், ஓர் போர்ச்சேவகனின் காதை பேதுரு வெட்டினான். பேதுரு விழித்திருந்து ஜெபம் செய்யாதபடியால் பாவத்தில் விழுந்தான்! ஆனால், விழித்திருந்து ஜெபம் செய்த இயேசுவோ, மிகுந்த தூய்மையாயும் அன்பாயும் நடந்துகொண்டார்!! நம்மை முன்கூட்டியே எச்சரிப்பதற்கு தேவன் எப்போதும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். ஆவியானவர் நம் இருதயத்திற்குள், "இப்போது சற்றே அமர்ந்து உன் நேரத்தை ஜெபத்தில் செலவிடு!" என மெல்லிய தொனியாகப் பேசுவதை நாம் எல்லோருமே கேட்டிட முடியும்!


ஜெபம்:

அன்பின் தகப்பனே! சோதனையோடுகூட தப்பித்துக் கொள்ளும் வழியைத் தரும் ஜெப ஜீவியம் எங்கள் வாழ்வில் நீங்காத பங்காய் மாறிட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments