Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 28

 "இன்று அவருடைய சத்தம்"


அக்டோபர் 28


🔸️ தேவனிடத்தில் சேர்வதே பாவத்தை ஜெயித்திடும் இரகசியம்! 🔸️


"எங்களைத் (திராணிக்கு மேலான) சோதனைக்குட்படப் பண்ணாமல்...." என்ற விண்ணப்பத்தை தொடர்ந்து, "தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும்" என்ற விண்ணப்பம் வருவதை பார்த்தீர்களா! (மத்.6:13). "இரட்சித்துக்கொள்ளும்" என்ற வார்த்தைக்கு விரிவாக்கம் யாதெனில், "எங்களை உம்மண்டை இழுத்துக்கொள்ளும்" என்பதுதான்! எனவே இந்த ஜெபம், "எங்களை தீமையிலிருந்து விடுவித்து, உம்மண்டை இழுத்துக்கொள்ளும்" என்பதாகவே உள்ளது.


தேவனும், தீமையும் வேறு வேறு திசையிலிருந்து நம்மை இழுக்கும் வலிமையான சக்திகளாகும். ஆகவேதான், "தகப்பனே, தீமையை நோக்கி இழுக்கும் சக்தியை என் மாம்சத்தில் நான் அதிகமாய் உணர்கிறேன். ஆனால் நீரோ என்னை அந்தப் பாதைக்குள் போகவொட்டாதிரும்! அத்தீமைக்கு என்னை ஒப்புக்கொடுக்க நானும் விரும்பவில்லை. ஆண்டவரே, என்னை நீர் தயவாய் உம் பாதைக்குள் இழுத்துக்கொள்ளும்" என்றே ஜெபிக்கிறோம்.


பாவத்தின்மீது நாம் ஜெயம் பெற்ற வாழ்க்கை வாழ வேண்டுமென்றால், "நான் தேவனண்டையில் இழுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என்ற தீராத வாஞ்சையும் தாகமும் மிக மிக முக்கியமானதாகும்!  


இன்று அநேகக் கிறிஸ்தவர்களிடத்தில், "பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது" (ரோமர் 6:14) என்ற பொன்னான வாக்குத்தத்தம் அவர்கள் ஜீவியத்தில் நிறைவேறாததற்கு காரணம், 'பாவத்தின் பிடியிலிருந்து விடுதலையாக வேண்டும்' என்ற தீராத வாஞ்சையும் தாகமும் அவர்களிடம் இல்லாததால்தான்! இவர்கள் தேவனிடம் சென்று, "ஓ, என் தேவனே! என்ன விலைக்கிரயம் ஆனாலும், அதைச் செலுத்த நான் ஆயத்தம்.... நீரோ என்னை பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை செய்யும்!" என ஒரு தடவைகூட கதறி ஜெபித்திருக்கவே மாட்டார்கள். ஏனெனில், பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற 'தீராத தாகம்' இவர்களுடைய ஜீவியத்தில் இல்லை. . . . அவ்வளவுதான்! 


இவர்களோ, மோசமான நிலைக்கு வியாதிப்பட்டு விட்டால் "அதனிமித்தம்" தேவனிடம் கூக்குரலிட்டு கதறி ஜெபிப்பார்கள். ஆனால், அந்தோ...! இவர்கள் நோயுற்றிருப்பதைவிட, பாவம் செய்வதே மகா கொடியது என்பதை உணருவதேயில்லை!! எனவேதான், இவர்கள் தோல்வியின் படுகுழிக்குள் மூழ்கி இருக்கிறார்கள் என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை!!


"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" (எரேமியா 29:13) என்றே தேவன் கூறுகிறார். 


ஜெபம்:

எங்கள் பரம பிதாவே! பாவத்திற்கு எதிர்முனையில் நிற்கும் உம்மிடம் சேர்வதே ஜெயத்தின் இரகசியம் என அறிந்தோம்! உம்மிடம் கூக்குரலிட்டு தீவிரமாய் உம்மைச் சேர்ந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments