இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 6
🔸️ தேவனுக்கு முன்பாக தாழ்மைபட்டிருக்கக்கடவோம்! 🔸️
நான் சில சமயங்களில் திறந்த வெளியில் அமர்ந்து வானத்திலுள்ள நட்சத்திரங்களை அண்ணாந்து பார்ப்பதுண்டு. வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பதையும், இந்த அண்டசராசரத்தில் இந்த பூமி ஒரு சிறு துரும்பைப்போல் இருப்பதையும் நான் அறிவேன்! இந்த ஆச்சரியத்தில் நான் மூழ்கி, "ஓ தேவனே, நீர் எவ்வளவு பெரியவர்! இந்த அண்டசராசரமும் எத்தனை மகத்துவமும் பெரியதுமாய் இருக்கிறது! இந்த அண்டசராசரத்தில் பூமி என்று அழைக்கப்படும் இந்த சிறிய துரும்பில் "நானோ" இன்னும் மிக மிகச் சிறிய ஒரு தூசியாகவே இருக்கிறேன்! அப்படியிருந்தும், இந்த பூமியில், உம் ஸ்தானாதிபதியாக இருந்துகொண்டு உம்முடைய மகத்துவங்களைப் பிரசங்கிக்கும் பொறுப்புள்ள இடத்தில் இருக்கிறேன்! ஆகவே, ஆண்டவரே, என்னைக் குறித்து நான் தாழ்மையான தெளிந்த எண்ணம் கொண்டிருக்க எனக்குத் தயவாய் உதவி செய்வீராக!" என்றே ஜெபிக்கிறேன். இதே ஜெபத்தை நீங்களும்கூட தேவனை நோக்கி ஜெபிக்கும்படி அன்புடன் ஆலோசனை கூறுகிறேன்!
தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்போடு நான் ஏன் தொடர்புகொள்ள முடிவதில்லை! ஏனென்றால், நான் அவ்வளவு பெரியவனாய் இருக்கிறேன்! நான் மானிட ரூபத்தோடு அதன் அருகில் சென்றால், அவை அஞ்சி விலகி ஓடிவிடும். நான் அந்த எறும்போடு தொடர்பு கொள்ள ஒரே வழி, நான் முதலாவது அந்த எறும்பைப்போல் மாற வேண்டும். அதேபோல், தேவனும் நம்மோடு தொடர்பு கொண்டிட ஒரே வழி, அவர் நம்மைப் போலவே மாறுவதுதான்! (எபி.2:14). இந்த உண்மையை நாம் யாவரும் புரிந்து கொள்வது மிக எளிது.
இப்போது அதேபோல், நாம் பிறருக்குச் செய்யும் ஊழியத்திலும்கூட (ஸ்தல சபையோ அல்லது சந்திக்கப்படாத இடமோ), நமக்கு முன்னிருக்கும் முதல் நியதி "எல்லாவற்றிலும் அவர்களுக்கு ஒப்பாக மாறுவதுதான்!" என்பதை மறந்துவிடவே கூடாது! அதாவது, எசேக்கியேல் தீர்க்கதரிசி கூறுவதுபோல், "அவர்கள் உட்காருகிற (தாபரிக்கிற) ஸ்தலத்திலே நாமும் உட்கார்ந்து" (எசேக்கியல் 3:15) என்பதே அதன் பொருளாகும்!! இங்குதான் தேவனுக்கு முன்பாக நாம் தாழ்மைப்படும் இரகசியம் அடங்கியிருக்கிறது!
ஜெபம்:
எங்கள் பரலோக தகப்பனே! உம்முடைய மகத்துவத்தை நான் கண்டு, வானங்கொள்ளாத தேவனுக்கு முன்பாக எப்போதும் தாழ்மைப்பட்டு வாழ, எளியவர்களிடமும் தாழ்த்தி ஐக்கியம் கொள்ள உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments