Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

டிசம்பர் 29

 இன்று "அவருடைய" சத்தம்


டிசம்பர் 29


🔶️ எத்துன்பத்திலும் "அவர் மெல்லிய சத்தம்" கேட்டிட வேண்டும்! 🔸️


"எந்தப் பெருங்காற்றும் அலையும்" தங்களை மூழ்கடித்துவிடும் என சீஷர்கள் பயந்தார்களோ "அவைகள் மீது" இயேசு மிதித்து நடந்து, அவர்களை நெருங்கி "நான்தான் பயப்படாதிருங்கள்" என மெல்லிய சத்தமாய் சீஷர்களிடம் கூறினார்! அவ்வேளையில் அந்தப் பெருங்காற்று உடனே அமைதியானது!! இன்றும் நம் வாழ்க்கையில் நம்மை அச்சுறுத்தி கலங்கச் செய்யும் எந்தப் புயலையும் தன் "மெல்லிய சப்தத்தால்" அமைதிப்படுத்த.... அவர், இன்றும் மாறாதவராகவே இருக்கிறார். "உம்முடைய காருணியம் (மென்மையான மெல்லிய சத்தம்) என்னைப் பெரியவனாக்கும்"

(சங்.18:35) என்ற வசனம்தான் எவ்வளவு உண்மையானது!!


பிறருடைய விரோதத்தை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறதா? அப்படியானால், 

"தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்" (எபி.12:3). நம்முடைய நண்பர்கள், உறவினர்களிடமிருந்து நாம் சந்திக்கும் விரோதங்கள், நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும் அடையாளங்களே ஆகும்! "இந்த பாதையில்தான்" நாம் இயேசுவையும் சந்திக்கிறோம். அவர் விரோதத்தினால் துன்பப்பட்டாலும், சுய-அனுதாபத்திற்கும், குறை கூறுதலுக்கும் தன்னை ஒப்புக்கொடாமல் தீமையை நன்மையினால் ஜெயித்தார்! தன் மீது குற்றம் சுமத்தியவர்களை மன்னித்து ஆசீர்வதித்தார்! இவ்வேளையில், தன் பிதாவின் மெல்லிய சத்தத்தை கவனித்துக் கேட்டு அவரிடமே தன் காரியங்களை ஒப்புவித்தார்!!


நம் பிதா, நாமனைவரும் பேசுகின்ற, செய்கின்ற ஒவ்வொரு காரியங்களையும் கவனிக்கிறபடியால் சகலத்தையும் ஒருநாளில் நீதியாய் நியாயம் தீர்ப்பார். அவருடைய நியாயத்தீர்ப்பில் எவ்வித பாரபட்சமும் இருக்காது. ஏனென்றால், ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் உள்ள உண்மை என்னவென்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார்! 


இயேசு செய்ததைப் போலவே காரியங்களை பிதாவிடம் ஒப்படைத்து அவருடைய மெல்லிய குரலை நாமும் கேட்டால், சுய-பட்சாதாபத்தின் எல்லா உணர்வுகளையும் நாம் ஜெயித்து, அவருடைய பாடுகளின் ஐக்கியத்தில் நமக்கும் பங்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்திடவும் முடியும்! இவ்வாறு நாம் செய்வோமென்றால், எல்லா தீமையான புறங்கூறுதலையும், குற்றஞ்சாட்டும் சுபாவத்தையும், பிறர் நமக்கு இன்னது செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்புக்களையும், சுயத்தைப் பாதுகாக்கும் சுபாவங்களையும், தன்னை நியாயப்படுத்துவதும், சுய-அனுதாபம் கொள்ளுவதும் ஆகிய யாவற்றையும் ஜெயித்து நாம் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும்!!      


ஜெபம்:

பரலோக தந்தையே! எவ்வித பெரும் புயல், விரோதங்கள் ஆகிய வாழ்வின் சூழலில் "உமது மெல்லிய சத்தம்" கேட்டு, இயேசுவின் ஆசீர்வதிக்கப்பட்ட அடிச்சுவடு தவறாமல் பின்பற்றி நடந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments