Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

டிசம்பர் 31

 இன்று "அவருடைய" சத்தம்


டிசம்பர் 31


🔸️ சிலுவையின் பாதையில் புதிய பாடலை கற்றுத் தேறிடக்கடவோம்! 🔸️


பரலோகத்தில் இனிய கானம் ஒலித்தது! அவைகள் தங்கள் பிதாவுக்கு முன்பாக துதியால் நிரம்பிய கானமாகவும், ஆராதனையின் கானமாகவும், ஆழ்ந்த மகிழ்ச்சியால் திளைத்த கானமாகவும் இருந்தது! ஜெயம் பெற்றவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு "சீயோன் மலையின் மேல்" நின்றிருந்தார்கள் (வெளி.14:2,3).


இந்த ஜெயம் பெற்றவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாக "புதுப்பாட்டைப்" பாடினார்கள் என்றும், அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட 1,44,000 பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக் கொள்ளக்கூடாதிருந்தது என வாசிக்கிறோம். இது ஒரு பெரிய விசேஷம் இல்லையா! இதை ஏன் மற்றவர்கள் கற்றுக் கொள்ள முடியவில்லை? மற்றவர்களிடம் சங்கீத ஞானம் இல்லை என்பதற்காகவா? அப்படி ஒன்றுமில்லை. அப்படியிருக்குமென்றால், சினிமா பாடகர்களைக் கொண்ட "பிசாசின் குடியிருப்பில்" ஏராளமான பேர் சங்கீத வித்தகர்களாக இருக்கிறார்களே!


அப்படியானால் இந்த புதிய பாடல் வேறு என்ன? இந்தப் புதிய பாடலை ஒருவன் தன் இருதயத்தில் மாத்திரமே கற்றுக்கொள்ள முடியும். வெளி. 5:12-ல் காணும்

"அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரர்" என்பதே அந்த புதிய பாடல்.  


இப்பாடலில் குறை சொல்வதும் முறுமுறுப்பதும் ஒரு கடுகளவும் கிடையாது! இப்பாடலை கற்றுக் கொள்வதற்காகவே தேவன் இப்பூமிக்குரிய வாழ்க்கையை நமக்கு அருளியிருக்கிறார் என எத்தனைபேர் அறிந்திருக்கிறார்கள்? அது பரலோகத்தின் பாடல்! துதியின் பாடல்! நன்றியின் பாடல்! -- இப்பாடலில் ஒரு துளிகூட முறுமுறுப்பும் குறை சொல்லுதலும் கிடையாது. 


நாம் புகை வண்டியைத் தவற விடுகிறோம்..... சமைத்த உணவு எதிர்பார்த்த ருசி இல்லை.... யாரோ சிலர் உரிமைகளைப் பறித்துச் செல்கின்றனர்...... இவ்வாறு எத்தனை எத்தனை அருமையான சந்தர்ப்பங்கள் நாம் சிலுவையை எடுத்து இயேசுவைப் பின்பற்றி புதிய பாடலைக் கற்றுக் கொள்ளும்படி நமக்கு கிட்டுகின்றது!  


நாம் சிலுவையை எடுத்து அதில் நம்முடைய உரிமைகளுக்காகவும் மதிப்பிற்காகவும் நம் சுயத்திற்காகவும் மரிக்க விரும்பாத பட்சத்தில், இப்புதிய பாடலைக் கற்றுக்கொள்வது ஒருக்காலும் முடியாது. நாமோ, நாள்தோறும் நம் சிலுவையை எடுத்து, ஆட்டுக்குட்டியானவர் நின்ற சீயோன் சிகரம் நோக்கி தீவிரமாய் செல்லக்கடவோம்! ஜீவ காலமெல்லாம் "புதிய பாடலே" நம்மிடம் ஒலித்திடக் கடவது!!       


ஜெபம்:

எங்கள் பரலோக பிதாவே! எங்கள் வாழ்வின் பயணம் சிலுவையின் பயணம்! ஜெயம் பெற்ற ஆட்டுக்குட்டியானவர் நின்ற சீயோன் மலை நோக்கி செல்லும் பயணம்! யாதொரு முறுமுறுப்பும் இப்பயணத்தில் இல்லை! துதியின் புதிய பாடலே எங்கள் பங்கு! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments