Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 01

இன்று "அவருடைய" சத்தம்


ஜனவரி 1


🔸️ அவருடைய கட்டளைகள் வியக்கத்தக்க  வாக்குத்தத்தங்கள்! 🔸️


ஆதிமுதலாய் "மனுஷன் எவ்வாறு வாழ வேண்டும்?" என தேவன் விரும்பினாரோ அவ்வித வாழ்க்கையை மனிதன் இப்போது வாழ முடியும் என்பதே சுவிசேஷத்தின் சுபிட்சமான செய்தியாகும்! கிறிஸ்துவின் அழைப்பிற்கு சிறிதும் பிசகில்லாமல்  தங்களை சம்பூரணமாய் சமர்ப்பணம் செய்திடும் யாவரும்  ஒரு தொடர்ச்சியான வெற்றி வாழ்க்கையை வாழ்ந்திட முடியும்!!


பாவத்தை ஜெயித்து வாழும் ஓர் உன்னத வாழ்க்கையைப் புதிய ஏற்பாடு நமக்கு வாக்களித்திருக்கிறது. இதற்குரிய அருமையான தேவ வாக்குத்தத்தத்தை ரோமர் 6:14, "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" என கெம்பீரமாய் கூறுகிறது!!


பயத்திலிருந்தும், கவலையிலிருந்தும், முற்றிலுமாய் விடுதலையாகி ஒரு தொடர்ச்சியான மகிழ்ச்சியின் வாழ்க்கையை வாழும்படி "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். . . நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்!"  (பிலிப்பியர் 4:4,6) என கட்டளையிடும் தெய்வ வார்த்தையின் ரீங்காரத்தையும்  கேளுங்கள்!!


நாம் எவைகளைச் செய்வதற்கு தேவன் பெலன் தருகிறாரோ, அவைகளை மாத்திரமே நாம் செய்யும்படி தேவன் கட்டளை கொடுக்கிறார் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, ஒன்றை நாம் செய்து சாதித்துவிடுவதற்கு தேவன் நமக்கு அருளும் கிருபையைக் காணும்போது, "அவருடைய கட்டளைகள் அத்தனையும் வாக்குத்தத்தங்களால்  இழையோடி இருக்கிறதே!" என நாம் வியக்காமல் இருக்கவே முடியாது!! எனவே, நாம் ஒரு தொடர்ச்சியான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழவேண்டும் எனவும், முற்றிலுமாய் பயமும் கவலையற்ற வாழ்க்கை வாழவேண்டும் எனவும், மேலே நாம் குறிப்பிட்ட தேவ கட்டளைகள், நாம் அவ்விதமான வாழ்க்கை வாழ்ந்துவிடுவதற்கென தேவன் நம்மைப் பெலப்படுத்தும் வாக்குத்தத்தங்களே என அறிந்து கொள்கிறோம்!


இதேபோன்று புதிய ஏற்பாட்டில் எத்தனை எத்தனை மகிமையான வாக்குத்தத்தங்கள் இருக்கிறது தெரியுமா! இவ்வாறு தெய்வ  கற்பனைகள் அத்தனையும்  வாக்குத்தத்தங்களே என்ற உண்மையை நீங்கள் அறிந்துகொண்டால், "சுவிசேஷம் முழுவதும் சுபிட்சம் நிறைந்த செய்திகளே!" என நீங்கள் மனப்பூர்வமாய் ஏற்று மகிழ்வீர்கள். 


ஜெபம்:

எங்கள் பரலோக பிதாவே! உமது அனைத்து கட்டளைகளும் நாங்கள் மகிழ்ச்சியான வாழ்வு பெற நீர் தந்திட்ட வாக்குத்தத்தங்கள் என காணும்படி எங்கள் கண்களைத் திறந்தீரே.... ஆண்டு முழுவதும் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவிட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர். சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday





Post a Comment

0 Comments