இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 9
🔸️ பாவத்தின் மேல் வெற்றி நிச்சயம்! 🔸️
விசுவாசம் இல்லாமல் தேவனிடமிருந்து ஒன்றையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை சாத்தான் நன்கு அறிவான். அப்படியானால் உங்கள் இருதயத்தை எவ்வளவாய் அவிசுவாசத்தால் நிறைப்பதற்கு அவன் முயற்சி செய்வான் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்! அவிசுவாசமானது, பொய் சொல்லுதல், விபச்சாரம் செய்தலைவிட பயங்கர அபாயம் நிறைந்தது. ஏனெனில் பிறவற்றை நாம் பாவங்கள் என்று எளிதில் கண்டுகொள்ள முடியும். ஆனால் அவிசுவாசம் அப்படியல்லவே! அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் ஜீவனுள்ள தேவனை விட்டே விலகுவதற்குக் காரணமாகிவிட முடியும் என்று எபிரெயர் 3:12-ம் வசனம் நம்மை எச்சரிக்கிறது. ஆம், அவிசுவாசமே எல்லாப் பாவங்களுக்கும் வேர்!!
"நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டிருந்தால் பாவம் நம்மை ஆளுகை செய்யவே முடியாது" என்று ரோமர் 6:14-ம் வசனம் திட்டமாய் கூறுகிறது. மிக வெளிப்படையான இவ்வசனத்தை ஒரு சிறுபிள்ளைகூட புரிந்துகொள்ள முடியும்! இவ்வாறெல்லாம் இருந்தும், அநேக விசுவாசிகள் பாவத்தின் மேல் பூரண வெற்றியுள்ள வாழ்க்கை வாழமுடியும் என்ற சத்தியத்தை விசுவாசிக்கவில்லையே!!
நீங்கள் வெற்றி வாழ்க்கை வாழவே தேவன் விரும்புகின்றார்! உங்கள் சிந்தனை ஜீவியம் எவ்வளவு அருவருப்பாய் இருந்தால் என்ன? எவ்வளவோ காலம் நீங்கள் கோபத்தால் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் என்ன? இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல! தேவன் உங்களை நூற்றுக்கு நூறு விடுதலை செய்து சுத்த இருதயத்தை உங்களுக்கு கொடுத்திட முடியும்! ஆனால் இவை எல்லாவற்றையும், உங்களிடம் விசுவாசம் இல்லையென்றால், அவரால் ஒன்றும் செய்யவே முடியாது!
நாம் இருதயத்தில் விசுவாசிப்பதை, வாயினால் அறிக்கை செய்ய வேண்டும் என்றல்லவா வேதம் கூறுகிறது (ரோமர் 10:10). இது ஒரு மிக முக்கியமான கோட்பாடாகும்! ஏனெனில், வாயினால் அறிக்கை செய்வதன் மூலமாகவே நம் இருதயத்தின் விசுவாசத்தை நாம் பிரதிபலித்திட முடியும். இதன் விளைவுதான், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாகும் இரட்சிப்பிற்குள் நம்மை நடத்துகிறது. ஜெயம் சொற்ப நாட்களில் வந்துவிடாது! எனவே கொஞ்சமும் அதைரியம் அடைந்து விடாதீர்கள்...... தேவன் உங்கள் வாயின் அறிக்கையை நிச்சயம் கனப்படுத்துவார்!!
ஜெபம்:
எங்கள் பரமபிதாவே! எங்களை அணுகும் பாவத்தை ஜெயித்து வாழ முடியும் என்ற விசுவாசத்தை இன்று எங்கள் இருதயத்தில் தந்தமைக்காக உமக்கே நன்றி! இயேசுவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments