இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 10
🔸️ துன்பத்தில் ஆவிக்குரிய வளர்ச்சி! 🔸️
நாத்திகன் நம்மைப் பார்த்து, "ஓர் அன்புள்ள தெய்வம், உங்களை எப்படி இவ்வளவு துன்பங்களை கடந்து வர அனுமதிப்பார்?" என்று கேட்கலாம். ஆவிக்குரிய கல்வித்திட்டத்தில் துன்பமும் ஒரு பகுதி என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆம், துன்பத்தின் மூலமாகவே தேவன் தன்னுடைய பிள்ளைகளை முதிர்ச்சி பெற நடத்துகிறார். நீங்கள் துன்பம் அடைவதற்கு அதிகமான சந்தர்ப்பம் இல்லாதிருந்தால், நீங்கள் வளர்ச்சியும் அடையமாட்டீர்கள் என்பதுதான் பொருள்!
ஒருவேளை, கடந்தமுறை கொஞ்ச துன்பத்திலேயே நீங்கள் முறுமுறுத்து குறை கூறியதால், உங்கள் சொந்த வழியிலேயே செல்வதற்கு தேவன் அனுமதித்திருப்பார். "இப்படி" தேவன் உங்களை ஓர் அறையில் ஒதுக்கி வைப்பது, மிகவும் துக்கம் நிறைந்ததாகும். இவ்வாறு ஓர் அறையில் தேவனால் ஒதுக்கப்படுவதைவிட என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நான் பாடுகளுக்குள் பிரவேசிப்பதே பாக்கியம்!
தேவன் நம்மை துன்பத்தின் பாதையில் நடத்தும்போது, மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவது மதியீனமாகும். எப்படி என்றால், உங்கள் பிள்ளைகள், "தாங்கள் மாத்திரம் பள்ளிக்குச் செல்லும்போது, சேரியில் உள்ள பிள்ளைகள் நாள் முழுவதும் மண்மேட்டில் விளையாடுகிறார்களே!" என வியப்பதற்கு ஒப்பாகும். தேவன் நம்மோடு இடைப்படும் கிரியை யாவும் அவர் நம்மீது வைத்த பூரண அன்பினாலேயே கிரியை நடப்பிக்கிறார். நாம் சந்தோஷமாய் இருக்கவே தேவன் விரும்புகிறார்..... ஆனால் நுரை போன்ற மேற்பூச்சான இவ்வுலக சந்தோஷம் அல்ல..... மாறாக, பரிசுத்த ஜீவியத்தின் மூலமாய் வரும் உண்மையாய் நிலைத்து நிற்கும் சந்தோஷம்! நாம் பரிசுத்தம் அடைவதற்கு துன்பத்தைக் கடந்து வருவதல்லாமல் வேறு வழியே இல்லை என வேதம் திட்டமாய் கூறுகிறது (எபிரெயர் 12:10).
இப்பூமியில் நடந்த எல்லோரைக் காட்டிலும் மகிழ்ச்சி நிறைந்த மனிதர் இயேசு ஒருவரே! இருப்பினும் எல்லோரைக் காட்டிலும், அதிகமாய் துன்பம் அடைந்ததும் அவர் ஒருவரே! தன் பிதா பூரண அன்புள்ளவர் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவேதான், பிதா அனுப்பிய எல்லா வழிகளுக்கும் தன்னைப் பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுத்தார்! அவரது முழுமையான வெற்றி வாழ்க்கையின் இரகசியமும் இதுதான்!!
ஜெபம்:
இரக்கமுள்ள எங்கள் பிதாவே! துன்பத்தில் 'ஆவிக்குரிய வளர்ச்சி' அடையும் வழியை இப்போது கண்டு கொண்டோம்! இனி, பொறுப்புடன் வாழ தயை புரியும்.... இயேசுவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments