Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 14

இன்று "அவருடைய" சத்தம்


ஜனவரி 14


🔸️ ஒவ்வொரு பாடுகளிலும் ஒரு தேவ நோக்கம் உண்டு! 🔸️


 நம் வாழ்க்கையில் குறுக்கிட தேவன் அனுமதிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அவருடைய "மகிமையான நோக்கம்" ஒன்று உண்டு என நாம் கண்டுகொள்வோமென்றால், அது எத்தனை பெரிய மகிழ்ச்சியான அற்புத வாழ்க்கை! அவர் நம்முடைய ஜெபங்களுக்கு "இல்லை" என்று பதில் உரைத்தாலும் அதுவும் அவரது பூரண அன்பின் இருதயத்திலிருந்தன்றோ பிரவாகிக்கிறது!!  


வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களை கடிக்கும்படி தேவன் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினாரே, அதுவும் அவரது அன்பின் கிரியைதானோ? (எண்ணாகமம் 21:6). நிச்சயமாக அப்படித்தான்! ஏனெனில், இதன் மூலம்தான் தேவன் அவர்களை மனந்திரும்பும்படி செய்து, தான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவரிடம் அவர்களைத் திரும்பக் கொண்டுவர முடிந்தது! அவரோ அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார்..... ஆனால், அவர்கள் மனந்திரும்பும் வரையில் அது அவரால் கூடாத காரியமாக இருந்தது!! 


 "நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற திட்டங்களை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே - அது உங்களுக்கு எதிர்கால முடிவையும் நம்பிக்கையையும் கொடுக்கும்" என்றே கர்த்தர் உரைக்கிறார்! 

(எரேமியா 29:11).


இவ்வுலகமானது, நோய் நொடிகளாலும், விஷப்பாம்புகளாலும் நிறைந்த பாதுகாப்பற்ற இடமாய் தேவன் அனுமதித்ததற்கு ஒரு காரணமுண்டு! அது என்னவெனில், ஜனங்கள் தங்கள் துன்பத்தில் தன்னிடம் திரும்பவும், அவர் அவர்களை ஆசீர்வதிக்கவுமே ஆகும்!! எனவே, சாத்தான் கொண்டுவரும் எல்லா தீமையானவைகளையும் தேவன் எவ்வாறு தன் நோக்கம் நிறைவேறும்படி கிரியை செய்ய உபயோகிக்கிறார் என்பதை இப்போது நாம் காண முடிகிறது! நித்தியத்திற்குள் பிரவேசித்தவர்களை நாம் கண்டு, பாம்புக்கடியையும், பொருளாதார நெருக்கடியையும், புற்றுநோய் போன்றவற்றையும் தேவன் எவ்வாறு உபயோகித்து அவர்களை பாவத்திலிருந்து விலக்கி அவருடைய பிள்ளையாய் மாறும்படி செய்தார் என்று கேட்கும்போது, நாம் இந்த சத்தியத்தை பூரணமாய் அறிந்து கொள்ளுவோம்! மேலும், தேவன் எவ்வாறு பாடுகளை உபயோகித்துத் தன் பிள்ளைகளைப் பரிசுத்தப்படுத்தவும் அவருடைய சுபாவத்தை அடையவும் செய்தார் என்றும் அன்று கேட்டறிவோம்!!       


ஜெபம்:

இரக்கமுள்ள எங்கள் பிதாவே! பாடுகளை அற்பமாய் எண்ணாமல், அதன்மூலம் உம்முடைய நோக்கம் எங்களில் நிறைவேற அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



 

Post a Comment

0 Comments