Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 22

 இன்று "அவருடைய" சத்தம்


ஜனவரி 22


🔸️ அப்பழுக்கற்ற தேவ ஞானம்! 🔸️


தேவன் பரலோகில் இருக்கிறபடியால், பூமியில் உள்ள நம்மைக் காட்டிலும் அதிக ஞானம் நிறைந்தவர்! எனவேதான், அவருடைய பரிபூரண ஞானத்தால் நம்முடைய வாழ்வின் வழிகளை ஆயத்தம் செய்து கட்டளையிடுகிறார். "தேவனுடைய வழி உத்தமமானது, ஏனெனில் அவர் ஞானத்தில் பரிபூரணமானவர்.... என் வழியைச் செம்மைப்படுத்தி என் சூழ்நிலைகளை ஆயத்தம் செய்து கட்டளையிடுகிறவர் தேவனே!" என சங்கீதம் 18:30, 32-ல் (Living Bible - மொழிபெயர்ப்பு) வாசிக்கிறோம்.


அவரது பரிபூரண ஞானத்தில் நம்பிக்கையாய் இருந்து, நம் ஆள்த்துவம் முழுவதையும் அவரில் சார்ந்திருக்கச் செய்வதே விசுவாசமாகும்!!


பூமியைக் காட்டிலும் பரலோகம் உயர்ந்திருக்கிறபடியால், தேவ ஞானம் நம்மைக் காட்டிலும் மேலானது என்பதை ஒத்துக் கொள்வதற்கு நம்மில் யாருக்கும் பிரச்சனை இருக்காது என்றே எண்ணுகிறேன். தேவனுடைய வழிகளை, நாம் அநேக சமயங்களில் புரிந்து கொள்ள முடியாததற்கு இதுவே முக்கிய காரணம்! இது எப்படியெனில், ஒரு நாய் எவ்வாறு மனிதர்களுடைய வழியை புரிந்து கொள்ள முடியாதோ அதைப்போல! நாம் விசுவாசத்தில் வளர்ச்சியடைந்து, அவருடைய திவ்விய சுபாவத்தில் அதிகமதிகமாய் பங்குபெறும்போது மாத்திரமே, தேவனுடைய வழிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் நாம் அறிய ஆரம்பிப்போம்!!  


"எல்லா சூழ்நிலைகளையும் - ஜனங்களையும்" தேவனே தன் அப்பழுக்கற்ற ஞானத்தால் அரசாளுகிறார் என்ற சத்தியத்தை அநேக விசுவாசிகள் சந்தேகித்து....தயங்கித்.... தேங்கி நின்றுவிட்டனர்! தங்கள் உதடுகளால் ஒருவேளை இந்த சத்தியத்தை அங்கீகரித்து ஏற்கலாம். ஆனால் இவர்களோ தங்களின் அன்றாட ஜீவிய சூழ்நிலைகளில் இதைக் "கிரியையில்" விசுவாசித்ததே இல்லை! இன்றிலிருந்து, பிழையற்ற அவரது அனந்த ஞானத்தை நம் ஜீவியத்தின் ஒவ்வொரு சம்பவத்திலும் மெய்யாய் விசுவாசிக்கக் கடவோம்!!     

   

ஜெபம்:

ஞானம் நிறைந்த பரம தந்தையே! உமது ஆளுகையில் வாழும் எங்கள் ஜீவியத்தில் "பிழை ஏதும்" ஏற்படாது!! இயேசுவின் நாமத்தில் மிகுந்த நன்றியுடன்.... ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments