இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 25
🔸️ பணத்தைவிட தேவனே நமக்கு மேலானவர்! 🔸️
இந்த உலகில் பணம் மிகவும் வலிமை நிறைந்ததாய் இருக்கிறது! எனவேதான், நாம் சேவிக்கும்படி இரண்டே எஜமான்கள்தான் இருக்கின்றனர் என தேவனையும், உலகப் பொருளையும் தனித்தனி எஜமான்களாக இயேசு குறிப்பிட்டு கூறினார் (லூக்கா 16:13).
இந்த உலகம் பணத்தின் வலிமையை நம்புகின்றபடியால் "பணத்தினால் எல்லாம் கூடும்" என்கிறார்கள். விசுவாசிகளாகிய நாமோ "தேவனால் எல்லாம் கூடும்" என்கிறோம். ஆனால் அதிகபட்சமாக, அவிசுவாசிகள் தங்கள் தேவன் (பணத்தின்) மேல் வைத்துள்ள விசுவாசமானது, 'ஜீவனுள்ள மெய் தேவனின் விசுவாசிகள்' என தங்களைக் கூறிக்கொள்பவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைவிட அதிகமாய் உள்ளதே!?
இவ்வுலகில் நாம் அனுதினமும் பணவிஷயத்தில் ஈடுபாடு கொள்வதால், இப்பகுதியிலும் நாம் ஜெயம் பெற வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. நீங்கள் விண்ணப்பம் செய்யும் 'பெர்மிட்டோ' அல்லது 'லைசென்ஸோ' அல்லது இதுபோன்ற வேறு எதுவோ "பாஸ்" ஆகுவதற்கு உங்களிடம் லஞ்சம் கேட்கும் கறைபடிந்த அதிகாரிகளைக் காணும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த உலகமோ லஞ்சத்தினால் எதையும் சாதித்து விடலாம் என்று நம்புகின்றது! நம்மைக் குறித்து என்ன? பணம் சம்பாதிப்பதைவிட நம் தேவன் பெரிய அற்புதங்களைச் செய்ய முடியாதா? ஆனால் இதற்கென நமக்கு விசுவாசம் இல்லாதிருக்கும்போது, தேவன் நம் பட்சத்தில் இருந்து ஒருக்காலும் கிரியை செய்யவே முடியாது.
இவ்வுலகில் "கூடாதது ஒன்றுமில்லை" என்பதற்கு இரண்டு நபர்களே இருக்கின்றனர் என இயேசு கூறினார். ஒன்று தேவன்! இரண்டாவது "மெய்யாய் விசுவாசிக்கும்" ஒரு விசுவாசி!! (மாற்கு 10:27; 9:23).
1) தேவனாலும் 2) விசுவாசிக்கிறவனாலும், கூடாதது ஒன்றுமில்லை! இது கிட்டத்தட்ட நம்பமுடியாததொரு அற்புதமேயாகும். ஆனால் உண்மையாகவே இந்த விசுவாசத்திற்கு, சர்வ வல்ல தேவனின் வல்லமையோடு நம்மை இணைப்பதற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசத்தாலேயே, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகத்திற்கு, "தேவன் பணத்தைவிட மேலானவர்" என்று நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்! நாம் லஞ்சம் கொடுப்பதே இல்லை!! மெய் விசுவாசத்துடன் சர்வவல்ல நம் தேவனிடம் ஜெபிக்க மாத்திரமே செய்கிறோம்!!
ஜெபம்:
எங்கள் அன்பின் பிதாவே! பணத்தை அசட்டை செய்து, உம்மையே பற்றி வாழும் வாழ்க்கை ஓர் அற்புதம்! அதை நிரூபித்து வாழ உதவி புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் கேளும், பரம பிதாவே! ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"
From:-
0 Comments