இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 21
🔸️ தெய்வ கிருபை தேவனுடைய உதவிக்கரம்! 🔸️
சோதனையின் வலிமையை தேவனுடைய கிருபையின் வலிமையினால் மாத்திரமே வெல்ல முடியும்!
நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் வந்தது. ஆனால், கிருபையோ இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வந்தது. (யோவான் 1:17). நியாயப்பிரமாணத்தின் கீழ் (பழைய உடன்படிக்கையில்) ஜனங்கள் தங்கள் இருதயத்தில் சோதனையோடு கடுமையாய்ப் போராடினாலும், எப்போதும் அவர்கள் தோல்வியையே தழுவினார்கள். தர்சுப் பட்டணத்தானாகிய சவுல், தேவனுடைய பிரமாணத்தின் வெளியரங்கமான தரத்தில் பூரணமாய் ஜீவித்தாலும் (பிலிப்பியர் 3:6), "இருதயத்திலிருந்து" உண்டாகும் இச்சைக்கு முன்பாக வலிமையற்றவனாகவே இருந்தான் (ரோமர் 7:7- 11). ஆம், நியாயப்பிரமாணம் இருதயத்திலிருந்து பிறக்கும் இச்சையிலிருந்து ஜனங்களை விடுவிக்க முடியவில்லை. இந்த நியாயப்பிரமாணம் அதற்காக நியமிக்கப்பட்டதும் அல்ல! ஆம், மனுஷனுடைய உள்ளான பாவத்தையும், அவனுடைய இருதயத்திலிருந்து உண்டாகும் இச்சையிலிருந்து விடுதலையாக முடியாத அவனுடைய நிர்ப்பந்த நிலையையும் உணர்த்தவே நியாயப்பிரமாணம் தரப்பட்டது!!
ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டான புதிய உடன்படிக்கையின் நற்செய்தி என்னவெனில், நியாயப்பிரமாணத்தினால் கூடாதது கிருபையினால் கூடும் என்பதுதான்! "கொஞ்சமும் அருகதையற்றவர்களாகிய நம்முடைய பாவங்களை மன்னிக்கும் தயவு" என்பது மாத்திரம் தேவனுடைய கிருபை அல்ல. அவர் கிருபை இதைவிட மேலானதாகும்! கிருபையானது தேவனுடைய பெலன்!! ஆம், 2 கொரிந்தியர் 12:9-ல் கிருபையானது பெலனுக்குச் சமமாய் சொல்லப்படுவதை கவனியுங்கள்! இந்த பெலன் அல்லது இந்த வல்லமையே நம்முடைய சோதனையின் இக்கட்டான நேரத்தில் நமக்கு சகாயம் செய்ய அல்லது உதவி செய்ய கரம் கொடுக்கிறது!! (எபிரெயர் 4:16).
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! உமது கிருபை எங்களுக்கு "உதவி செய்யும் தேவ பெலன்" என கண்டுகொண்டோம்! சோதனையில் கிருபை தந்தருளும் எங்கள் ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி!! ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
From:-
0 Comments