Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 05

 இன்று "அவருடைய" சத்தம்


ஜனவரி 5 


🔸️ சாத்தானோடு கொண்ட 'யாதொரு' தொடர்பையும் துண்டியுங்கள்! 🔸️


நாம் இரட்சிக்கப்பட்ட பின்பு சரிசெய்து சீர்படுத்த வேண்டிய விஷயங்களில் ஒரு முக்கியமான பகுதி உள்ளது.  அது யாதெனில்,  சாத்தானோடும் பொல்லாத ஆவிகளோடும் நாம் கொண்டிருந்த உறவே ஆகும்.  நீங்கள் வானசாஸ்திர அஞ்சனத்திலும், விக்கிரக வழிபாட்டிலும்,  கைரேகை பார்ப்பதிலும், மை வைத்து மேஜிக் செய்வதுமானவைகளில்  ஈடுபட்டிருந்தால் அல்லது 'ராக் மியூசிக்',  தீமையான போதை மருந்துகளில் ஈடுபாடு கொண்டிருந்தால், இவைகளின் மூலம் நீங்கள் சாத்தானோடு கொண்டிருந்த உறவை இப்போது முற்றிலுமாய் துண்டித்துக் கொள்ள வேண்டும்! இதுபோன்ற காரியங்களில் நீங்கள் ஒருவேளை உங்களையும் அறியாமலே தொடர்பு வைத்திருந்தாலும் அவைகளையும் நீங்கள் கண்டிப்பாகத் துண்டித்துக் கொள்ளவேண்டும்!! 


இதற்கு நீங்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் யாதெனில், நீங்கள் வைத்திருக்கும் எல்லா விக்கிரகங்களையும், மாயாஜால புத்தகங்களையும், அசுத்த ஆவிகளின் பாதுகாப்பைத் தேடும் 'தாயத்து' போன்ற வஸ்துக்களையும் நீங்கள் முற்றிலுமாய் உடைத்தெறிந்து அழிக்க வேண்டும். (அவைகளில் எதையும் விலை உயர்ந்தது என விற்காமல்,  அழித்துவிட வேண்டும்!  அப்.19:19-ஐ  வாசித்துப்பாருங்கள்) அவ்வாறு செய்தபின்பு நீங்கள் இயேசுவை நோக்கி "ஆண்டவரே! நான் அறிந்தோ அல்லது அறியாமலோ சாத்தானோடு வைத்திருந்த எல்லாத் தொடர்பையும் துண்டித்துவிட்டேன்" என அறிக்கை செய்து ஜெபியுங்கள். இவ்வாறு ஜெபித்த பின்பு, நீங்கள் நேருக்கு நேராய்  சாத்தானுக்கு முன்பாக திரும்பி நின்று, "சாத்தானே, என் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உன்னை நான் கடிந்து  கொள்கிறேன். நான் இப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவன். இனிமேல் நீ என்னை ஒருக்காலும் தொடவே முடியாது!" என  தைரியமாய் கூவி முழங்குங்கள். ஏனெனில் யாக்கோபு 4:7 "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்!" என தெளிவாய் வாக்குரைத்து  கூறுகின்றது. ஆகவே சாத்தானுடைய பிடி இனிமேல் உங்கள் மீது இருக்கவே இருக்காது!   


ஜெபம்: 

ஓ, எங்கள் தகப்பனே! எங்களையும் அறியாமலே,  சாத்தானோடு தொடர்பு ஏற்படுத்திய ஒரு 'யாதொரு' காரியத்தையும் நாங்கள் வெறுத்து, அவைகளை எங்கள் ஜீவியத்திலிருந்து இப்போதே அழித்து விடுகிறோம்! தயவாய் எங்கள் பிழைகளை மன்னியும்!! இயேசுவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday






Post a Comment

0 Comments