இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 7
🔸️ 'எது நடந்தாலும்' வேத வாக்கைப் பற்றி நடப்பதே விசுவாச வாழ்க்கை! 🔸️
அநேக சமயங்களில் நம்முடைய 'உணர்ச்சிகள்' நம்மை வஞ்சிக்கக் கூடியவைகளாகவே இருக்கின்றன. ஆகவே இவ்வித உணர்ச்சிகளை நாம் ஒருபோதும் சார்ந்து நம்பிவிடவே கூடாது! உண்மை(Fact), விசுவாசம்(Faith), உணர்ச்சி(Feeling) ஆகியவைகளை மூன்று மனிதர்களாக சுட்டிக்காட்டி கூறிடும் உவமை ஒன்றுண்டு. இந்த மூன்று மனிதர்களும் ஓர் ஒடுக்கமான சுவற்றின் மேல் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்று கொண்டிருந்தனர். 'உண்மை' முதலாவதாக முன்னோக்கி நடந்துகொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து 'விசுவாசம்' நடந்து சென்று கொண்டிருந்தது. கடைசியாக, 'உணர்ச்சி' விசுவாசத்தைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. விசுவாசம் தன் கண்களை முன் சென்று கொண்டிருந்த உண்மையின் மீது பதித்து இருந்ததுவரை சகலமும் சுமுகமாய் நடந்தேறியது! அதேபோல், விசுவாசத்தை உணர்ச்சியானது விடாப்பிடியாக பின்தொடர்ந்து சென்றது!! ஆனால் தன்னைப் பின்தொடர்ந்து வரும் உணர்ச்சியைக் காண்பதற்கு விசுவாசம் திரும்பிப் பார்த்தவுடன் நிலை தடுமாறி கீழே விழுந்து..... மரணத்தைத் தழுவியது! அதோடு சேர்ந்து உணர்ச்சியும் செத்து அழிந்தது!! ஆனால் உண்மையோ, தனக்கு பின்னால் நடந்த எந்த நிகழ்ச்சியையும் சிறிதுகூட பொருட்படுத்தாமல் சுவற்றின்மீது கெம்பீரமாய் நடைபோட்டு 'தன்னந்தனியே' சென்றுகொண்டே இருந்தது!!
இந்த உவமை நமக்கு கற்றுத்தரும் பாடம் மிகத் தெளிவாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையே என்றென்றும் மாறாத உண்மை நிறைந்ததாகும் (ரோமர் 10:17). நம்முடைய விசுவாசம் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே உற்று நோக்கிக் கொண்டிருந்தால் ஒருக்காலும் இடறி விழும் அபாயத்தில் பிரவேசித்திட மாட்டோம்.
விசுவாசத்தைத் தொடர்ந்து, உணர்ச்சிகள் பின்பற்றி வரத்தான் செய்யும்! ஆனால் நாம் நம்முடைய உணர்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கத் துவங்கிவிட்டால், நாம் மிக எளிதில் நிலை தடுமாறி அதைரியத்திற்குள்ளும்.... கடும் குற்ற ஆக்கினைக்குள்ளும் விழுந்து மாய்ந்துவிடுவோம்!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! சூழ்நிலைகள் மாறும்போது, எங்கள் விசுவாசம் தளர்வதைக் காண்கிறோம்! "உமது வார்த்தையின் உண்மையை" அப்படியே ஏற்று பின்பற்றி வர அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments