இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 14
🔸️ நம் சாட்சியில் மனுஷர் புகழ் தேடும் தீமை வேண்டாம்! 🔸️
தேவன் நமக்குச் செய்த நன்மைகளை சாட்சி சொல்வது நல்லதுதான். ஆனால் அனேகமாய் நடப்பது யாதெனில், இவர்களின் சாட்சியின் நோக்கம், "நான் கர்த்தருக்காக செய்தவைகள்" என்ற ஜம்பமாய் தேய்ந்து தரம் கெட்டுவிடுகின்றது. இவர்களின் சாட்சிகளில் "நான் எவ்வளவு உண்மையுள்ளவன்" "நான் கர்த்தருக்காக எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறேன்....." என்ற சுய புகழ்ச்சியை தேடும் "ஜம்பங்கள்" வந்து விடுவதையேக் காண்கிறோம். அல்லது சிலரோடு சம்பாஷிக்கும்போது பேச்சுவாக்கில் நம்முடைய தியாகச் செயல்களைக் கூறி விடுகிறோம். இவையாவும் மற்ற விசுவாசிகள் தன்னை "முழு இருதயமானவன்" என எண்ணும்படி சுய புகழ்ச்சிக்காகவே செய்யப்பட்டவைகள் ஆகும்.
தங்களுடைய செயலுக்காக மனுஷர் புகழைத் தேடும் ஒவ்வொருவரையும், அன்று தேவன் ஆதிசபையில் அனனியா சப்பீராளின் மறைவான புகழ் தேடும் நோக்கத்தைக் கண்டதுபோலவே நம்மையும் காண்கிறார் என்ற உணர்வு நம் யாவருக்கும் தெய்வ பயத்தை தருவதாக!
நாம் தர்மம் செய்வதோ அல்லது காணிக்கை செலுத்துவதோ ஆகிய நற்கிரியைகளை எப்படிச் செய்யவேண்டும் என்றும் மத்தேயு 6-3ம் வசனத்தில் "வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்க" செய்ய வேண்டுமெனக் கூறினார். நாம் யாவரும் அறிந்திருக்கிறபடி நம் வலதுகைக்கோ அல்லது இடதுகைக்கோ தனித்தனியாக அறிவு இல்லை! அப்படியானால் எப்படி வலதுகை செய்வதை இடதுகை அறியாது கொடுக்கமுடியும் என்று இயேசு சீஷர்களுக்கு குறிப்பிட்டது, "கிறிஸ்துவின் சரீரமே" என நாம் பொருள்பட முடியும். வலதுகை இடதுகை போன்ற அங்கமாய் இருப்பவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ளவர்களே ஆவார்கள். எனவே நாம் செய்யும் நற்கிரியைகளை கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள மற்றொரு அவயவமான சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ தெரிந்து பகிரங்கமாய் கொடுக்காமல், அந்தரங்கமாய் கொடுப்பது சாத்தியமே ஆகும்.
தேவையுள்ள ஒரு சகோதரனுக்கு நீங்கள் பணம் கொடுத்து உதவ விரும்பினாலும், கூடுமானமட்டும் மறைவாக கொடுப்பதற்கே முயற்சி செய்யுங்கள். அப்போது மாத்திரமே அவர் உங்களோடு ஒட்டிக் கொள்ளாதவராய் இருக்க முடியும்! ஒருவேளை அந்த சகோதரன் தான் பெற்ற உதவியை வேறொரு நபரிடத்திலிருந்து பெற்றதாக எண்ணிக் கொண்டாலும் அதைக் குறித்து நீங்கள் சிறிதும் அலட்டிக் கொள்ளாதீர்கள். இதுபோன்ற நிலையில்தான் கடைசி நாளில் நீங்கள் பெற்றிடும் வெகுமதி மிக அதிகமாக இருக்கும்!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! உம்மிடம் பலன் பெறுவது ஒன்றே எங்கள் நோக்கமாய் வாழ்ந்து, "மனுஷர் புகழ்ச்சியை" உதறித்தள்ளி வாழ கிருபை தாரும்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments