Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 01

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 1


🔸️ "சுத்த இருதயத்தின் சந்தோஷமே, மெய் சந்தோஷம்!" 🔸️


சிந்தையில் சுத்தமாய் இருப்பதைக்காட்டிலும் உள்ளத்தில் (இருதயத்தில்) சுத்தமாயிருப்பது இன்னும் அதிக விசேஷமானது. தேவனையே அன்றி வேறொன்றுக்கும் தன் இருதயத்தில் இடம் கொடாதிருப்பதே அது! அநேகர் சுத்தமும் செம்மையுமான வாழ்வு வாழ்ந்த போதிலும், தேவன் தங்களுக்குக் கொடுத்த ஒரு சில வரங்களுடனோ, ஊழியங்களுடனோ, விக்கிரக ஆராதனைக்கு நடத்தும் பிணைப்புகளை கொண்டவர்களாய் இருக்கிறார்கள். தேவன் கொடுத்த ஈசாக்கை பலிபீடத்தின்மேல் திரும்ப தேவனுக்கே அர்ப்பணிக்க அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை!


நாம் எதை விரும்புகிறோம்? - தேவனும் கூடவே சில வரங்களும் அல்லது தேவனும் கூடவே சில ஊழியங்களும் அல்லது தேவனும் கூடவே மனுஷரின் நல் அபிப்பிராயங்களும் அல்லது ஒருவேளை தேவனும் கூடவே நம் சரீர சுகமுமோ? தேவனும் கூடச் சில ஈசாக்குமா? அல்லது தேவன் மாத்திரமே நமக்குப் போதுமா? இந்த சோதனையில் வெற்றி பெறாத ஒருவரும் அங்கீகரிக்கப்படுவதில்லை! நாம் கர்த்தரை நோக்கி "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" 

(சங்கீதம் 73:25) என உண்மையிலேயே சொல்லும் நிலைக்கு வந்து சேரும்பொழுதுதான், தேவனைப் பொருத்தவரை நாம் தகுதி அடைந்தவர்களாகிறோம்!


நமக்கு அருமையான எல்லாவற்றையும் தேவனுடைய பலிபீடத்தின்மேல் அர்ப்பணித்துவிட்டு தேவனோடு மாத்திரம் தனித்துவிடப்பட்ட, இந்த மோரியா மலையை நாம் ஒவ்வொருவரும் ஏற வேண்டியுள்ளது!


நமது வருவாய் உயரும்போது அல்லது பதவி உயரும்போது நமக்கு சந்தோஷம் பெருகுமானால், கேட்கக் காதுள்ளவர்களாய் இருப்போமானால்..... நம்முடைய சந்தோஷம் தேவனிலும், கூடவே வருவாயிலும் (அல்லது பதவி உயர்விலும்) இருக்கிறது என்று, தேவன் நம்மோடு பேசுவதைக் கேட்கலாம். அப்பொழுது நாம் கர்த்தருக்குள் (மட்டும்) சந்தோஷமாயிருக்க கற்றுக்கொள்ளும்வரை, நமது சந்தோஷத்தை 'சுத்திகரிக்க' வேண்டும். அநேக விசுவாசிகளால் "எப்பொழுதும்" சந்தோஷமாயிருக்க ஏன் முடிவதில்லை என்றால், அவர்களுடைய சந்தோஷம் தேவனிடம் மட்டுமில்லாமல் தேவனிலும் கூடவே ஏதாவதொன்றிலும் இருப்பதினால்தான்!?


நமது இருதயம் சுத்தமாய் இருந்தால் - தேவனுக்கு மட்டும் இடமளித்திருந்தால் - நமது சந்தோஷமும் சுத்தமாய் இருக்கும்!      


ஜெபம்:

எங்கள் பரமபிதாவே, எங்கள் சந்தோஷம் அவ்வப்போது மாறுவதாய் உள்ளதே! உம்மையே அன்றி, 'யாதொன்றும்' எங்கள் சந்தோஷத்தின் மூலதனமாய் இல்லாதிருக்க அருள் செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments