இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 2
🔸️ ஞானத்தில் வளரும் வழி 🔸️
வனாந்தரத்தில் ஆசரிப்புக் கூடாரம் கட்டுவது பற்றி சொல்லுகிறபோது, யாத்திராகமம் 39, 40 அதிகாரங்களில் 18 முறை திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருக்கிற வார்த்தை "கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே" என்பதாம்! தேவனால் கொடுக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தின் அமைப்பு ஒரு எளிய சாதாரண தோற்றம் உடையதாகும். மோசே பார்த்திருந்த, எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பிரமிடுகளுக்கு ஒப்பிடும்போது அது வெகு தூரமானது. ஆசரிப்பு கூடாரத்தின் அமைப்பு, மோசேக்கு 40-வது வயதில் அவனுக்குள் இருந்த சுயம் பூரண பலம் வாய்ந்ததாய் இருக்கும்போது கொடுக்கப்பட்டிருக்குமானால், அவன் அதை நிச்சயம் மாற்றியமைத்து, கவர்ச்சிகரமான தோற்றமுடையதாய் செய்திருப்பான். ஆனால் எண்பதாவது வயதில் கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்யுமளவிற்கு, அவனிடத்தில் சுயம் அவ்வளவாய் செத்திருந்தது. மேலும் அதுவேதான் கர்த்தருடைய மகிமையை கூடாரத்திற்குள் கொண்டுவந்தது!
தெய்வீக ஞானத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நம்முடைய மனுஷ ஞானம் சிலுவையில் அறையப்பட வேண்டும் (1கொரி 3:18). தேவன் மோசேயை அங்கீகரிக்க வேண்டுமானால், அவனுக்குள் இருந்த எகிப்தின் ஞானமாகிய பதர் எல்லாம் அடித்து நீக்கப்பட்ட பின்பே, அது சாத்தியமாகும்.
எருசலேம் வேதாகம பள்ளியில் உள்ள இறையியல் பேராசிரியரான கமாலியேலின் பாதபடியில் பவுல் மூன்று வருடங்கள் பயின்றான். ஆகையால் அவன் மனந்திரும்பின பின்பு, தெய்வீக ஞானம் அடையும்படி தன்னிலிருந்து கமாலியேலின் ஞானம் போரடித்து நீக்கப்பட, அரேபிய வனாந்திரத்தில் மூன்று வருடங்கள் அவன் செலவு செய்ய வேண்டியதாயிற்று! ! (கலா.1:17,18). அதன் பிறகுதான் பவுல் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று தேவனால் அங்கீகரிக்கப்பட முடிந்தது.
இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவ்வளவு முக்கியமான ஒரு பாடம் - ஆனாலும் உண்மையில் சிலரே இதை கற்றுக் கொள்கிறார்கள்!
ஜெபம்:
எங்கள் அன்பின் பிதாவே! எங்கள் சொந்த அறிவின் மேன்மையில் வீணராகிப் போகாமல், தெய்வீக ஞானத்தில் வளரும் வழியை காண்பித்ததற்கு உமக்கே நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்!
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"
From:-
0 Comments